Ad Widget

யாழில் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு எதுவித தொடர்பும் இல்லை – அங்கஜன்

யாழில் காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவுகள் முன்னெடுக்கப்பட்து தொடர்பில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாவட்ட பொது வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் சங்கத் தலைவி ஸ்ரீகாந்தி என்பவரால் இன்று யாழில் காணாமல் போனோர் தொடர்பாக பதிவுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் அங்கு பதிவுகளை முன்னெடுத்து வந்த காணாமல் போனோர் சங்கத் தலைவி ஸ்ரீகாந்தி பரீட்சயமற்றவராகவே காணப்பட்டதால், மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது. அத்துடன் அங்கிருந்த நபர் அவரை ஒளிப்படம் எடுத்துள்ளார்.

அதனையடுத்து கோபமடைந்த குறித்த சங்கத்தலைவி தன்னை ஒளிப்படம் எடுத்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க தலைவர் சகாதேவனை தாக்கியுள்ளார்.

எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாவட்ட பொது வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனின் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அது முடிந்து அனைவரும் மதிய போசனம் அருந்தி செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த பேச்சால் ஆத்திரமடைந்த காணாமல் போனோரின் உறவுகள், குறித்த பெண்ணிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியதுடன் அங்கயனுக்கு எதிராகவும் கோசமெழுப்பியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியது.

இந்நிலையில், குறித்த பிரச்சினை தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த அங்கஜன், குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி

யாழில் பதிவுகளை மேற்கொண்ட காணாமல் போனோர் சங்கத் தலைவிக்கு எதிராக போராட்டம்

Related Posts