Ad Widget

யாழில் ஐ.தே.க வேட்பாளர் அலுவலகம் மீது தாக்குதல்

சுன்னாகத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வைத்தியகலாநிதி சிவசங்கரின் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 02.30 அளவில் சுன்னாகம் கே.கே.எஸ் வீதியிலுள்ள குறித்த அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தியவர்கள், அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த வேட்பாளரின் பெயர்ப் பலகையின் ஒரு பகுதியை எரித்து, பின் அதனைத் தூக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வேலியில் இருந்த தகரங்களை கழட்டி எறிந்து, அலுவலகத்தில் இருந்த மின்குமிழ்களையும் அடித்து நொறுக்கிச் சென்றுள்ளனர்.

Related Posts