தோல்விகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை கனவு காண சொல்லிவிட்டு கண் மூடி விட்டார் எங்கள் அப்துல் கலாம் -டர்ஷன்

தோல்விகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை கனவு காண சொல்லிவிட்டு
கண் மூடி விட்டார் எங்கள் அப்துல் கலாம் என தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். .

அது மட்டுமல்ல நீங்கள் உங்கள் எதிர் காலத்தை மாற்ற முடியாது என்றும் ஆனால் பழக்க வழக்கங்களை மாற்ற முடியும் என்பதோடு அதனூடாக எதிர் காலத்தை மாற்ற முடியும் என்று கூறியவர் இந்தியாவின் முந்நாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான காலாநிதி அப்துல் கலாமவர்கள். இவரின் இப்பேற்பட்ட வாசகங்களை சாதிப்பதே எமது இளைய சமுதாயம் அவருக்கு செய்யும் கைமாறு என்பதை இங்கே தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமின் அனுதாப செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டுமே முடியும் என்று கூறி இளைஞர்களை விழிப்படைய செய்தவர் அப்துல் கலாம் அவர்கள். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டிற்குமே பொருத்தமாக இருக்கும். இவரின் முன்னுதாரனதோடு இளைஞர்கள் கல்வியில் மட்டுமல்லாது அரசியலிலும் தமது திறமையை வெளிக்கொணர முன்வர வேண்டும் என தெரிவித்தார். அப்துல் கலாமின் திடீர் மறைவு அவரின் குடும்பம், இந்திய தேசத்திற்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே ஜீரணித்து கொள்ள முடியாத இழப்பாகும்.

தமிழன் என்ற உணர்வையும் அதன் மகிமையையும் முழு உலகுக்குமே காட்டியவர் அப்துல் கலாம் என்றால் அது மிகையாகாது. எனவே அப்துல் கலாமின் சாந்திக்காக எங்கள் கனவுகளை நனவாக்குவோம் என்பதோடு அவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போமாக.

எங்கள் கனவு நனவாகும்
உங்கள் ஆத்மா சாந்திக்காக……

என்று தெரிவித்தார் .

Related Posts