யாழ். மாவட்டச் செயலகத்தினால் செய்தி மடல் வெளியீடு!

யாழ்.மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்களை தாங்கிய செய்தி மடல் இன்று புதன்கிழமை நண்பகல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

seithymalar 5658

யாழ்.மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் சம்பந்தமான தகவல்களை தாங்கி இந்த செய்தி மடல் வெளிவந்துள்ளது.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனிடம் இருந்து அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் முதலாவது பிரதியை பெற்றுக்கொண்டார்.

Related Posts