Ad Widget

பசுமாடுகள் உயிரிழக்க காரணமாக பேருந்து சாரதி பணியில் இருந்து இடைநிறுத்தம்

பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டி பகுதியில் எட்டு பசுமாடுகளை மோதி விபத்தினை ஏற்படுத்தி, அப் பசுமாடுகளின் உரிமையாளருக்கு வாழ்வாதரத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய பருத்தித்துறை போக்குவரத்து சாலையின் சாரதியை பணியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக கோண்டாவில் சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 13ம் திகதி, யாழ்ப்பாணத்தில் இருந்து, பருத்தித்துறை நோக்கி வந்த பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பேருந்து, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை கடந்த பசுமாடுகள் 15களை மோதி தள்ளியது.

இதில் ஜந்து மாடுகள் உயிரிழந்ததுடன், மூன்று மாடுகள் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸார், குறித்த பேருந்து சாரதிக்கு எதிராகமல்லாகம் நீதிமன்றில் நேற்று முன்தினம்(23) வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சும்பவத்துடன் தொடர்புடைய மேற்படி சாரதிக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து,சாலை அதிகாரிகளினால் அவர் பணியில் இருந்து இன்று(25) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சாலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Posts