Ad Widget

கொள்கைகளை ஏற்று இயக்கமாக செயற்பட அணிதிரளுங்கள் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் போராடி பெற்றுக் கொண்டதாக வரலாறு எமக்கு கற்பிக்கின்றது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சிந்தனையும் அதுவே மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கமாக நாம் உரிமைகளையும், எங்கள் தேவைகளையும் பெற்றுக் கொள்வோம் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை மாலை யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின்போதே கஜேந்திரகுமார் பொன்ன ம் பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின்போது மணியந்தோட்டம் மக்கள் கடந்த 5 வருடங்களில் ஈ.பி.டி.பியினராலும், தமிழ்தேசிய கூட்டமைப்பினராலும் தாம் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் நாங்கள் யாரையும் நம்ப தயாரில்லை. எங்கள் பகுதியில் வீதிகள் புனரமைக்கப்படாமலிருக்கின்றது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கை இன்னமும் மாறவில்லை. எல்லோரும் வந்துபேசுகிறார்கள். ஆனால் அவர்களால் எந்தப் பயனில்லை என கூறினர்.

மக்களுடைய ஆதங்கங்களுக்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாம் பதவிகளை இலக்கு வைத்து இங்கே வாக்கு கேட்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை
உன்மையாகவும் நேர்மையாகவும் பெற்றுக் கொடுக்கவேண்டும்.

என்பதற்காகவே நாம் வந்திருக்கிறோம். எம்மை பார்த்து யாரும் வாக்களிக்கவேண்டாம். எங்கள் கொள்கைகளுக்காக எங்களுடன் இணைந்து ஒரு இயக்கமாக சேர்ந்து இயங்குவதற்று வாருங்கள் என கஜேந்திரகுமார் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நாம் ஈ.பி.டி.பியும் இல்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பும் இல்லை. நாங்கள் உங்களுக்கு முன்னால் வருவது இதுவே முதல் சந்தர்ப்பம். இந்நிலையில் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுங்கள். என கேட்டதுடன், மக்களுக்கள் நீங்கள் வீதிகள் புனரமைப்பு மற்றும் வாழ்வாதார நிலமைகள் தொடர்பாக கேட்டுள்ளீர்கள்.

Related Posts