- Tuesday
- July 28th, 2026
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் யாழ்ப்பாணம், மந்துவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (10) இரவு நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரத்தின் போது இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டதை அடுத்தே, பிரசார மேடையை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறுத்தப்பட்டது. இதேவேளை, சாவகச்சேரி பகுதியில் நேற்று(10)...
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுகவீனம் காரணமாகவே, மன்னார் ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கொழும்பு சென்ற கொண்டிருந்த போது, மன்னார் ஆயர்...
"ஐ.நா. விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னரே வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் போர்க்குற்றவாளிகளாக பாதுகாப்புத் தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாகக் கருத்து வெளியிடமுடியும்." - இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். அறிக்கை கிடைப்பதற்கு முன்னதாக மேற்படி விவகாரங்கள் தொடர்பில் தற்போது வெளியிடப்படும் கருத்துகள் தொடர்பில் எதுவும்...
இலங்கையில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான நிவாரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை எனும் கவலைகள் தொடருவதாக பலர் தெரிவித்துள்ளனர். முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தில் ஏராளமான பெண்கள் தங்களது கணவர், மகன், சகோதரன் ஆகியோரை இழந்துள்ளனர். அவர்கள் இன்றளவும் உடல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு ஆளாகியிருப்பதாக பலரை சந்தித்துள்ள பிபிசியின்...
அடுத்து ஐந்து ஆண்டுகளில் தமது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. பிபிசி செய்தியாளர் ஒருவர் இது தொடர்பான வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக இலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில் அரசாட்சி பயம் என்ற புதிய நூல் ஒன்றிலேயே பிபிசி செய்தியாளர் அன்றூ ஹொஸ்கென் இந்த தகவலை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கையில் 'கண்களைத் திறக்கட்டும்' என்னும் தொனிப்பொருளில் நாடகங்களை ஆற்றுகை செய்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. வடமராட்சி மாலுசந்தியில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு இவ்வாறு நாடகம் மூலம் பிரசாரம் செய்தது. இசைக்கச்சேரி, நாடகம் மற்றும் எழுச்சிப் பாடல்கள் என தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 40பேர், நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் அடிப்படையிலேயே அம்மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 26 மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 மீனவர்கபளுமே இவ்வாறு...
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில், உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த மார்ச் 13ஆம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வளலாய் பகுதியின் கடற்கரையில் தேங்கியுள்ள கல் மற்றும் மணல் திட்டுக்களை அகற்றி, இறங்கு துறை (வான்) அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சேவாலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனம் இப்பணிகளை நடைமுறைப்படுத்தி வருவதாக திட்ட மேற்பார்வையாளர்...
முன்னாள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக்கட்சியில் நேற்று திங்கட்கிழமை இணைந்துகொண்டுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரான சாஹல ரத்னாயக்கவை தான் ஆதரிக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈபீடிபீ) இடையே என்ன வித்தியாசம் காணப்படுகிறது. நாங்கள் ஈபீடிபீயை நிராகரிக்க வேண்டுமானால், கூட்டமைப்பையும் தூக்கி எறியவேண்டும் எனத் தெரிவித்தார் தமிழ் தேசிய முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன். யாழ். தென்மராட்சி - கோவிலாக்கண்டி பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...
இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ் மக்கள் எந்தவித அச்சுறுத்தலோ சந்தேகமோ இன்றி தமக்கு விருப்பமான பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இவ்வாறு கூறியுள்ளார். 2008ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில், இடம்பெற்ற தேர்தல்களின்...
வெற்றிலை உண்டால் புற்றுநோய் ஏற்படுவது போல வெற்றிலையில் தொடர்ந்து இருக்க முடியாத வகையில் வெற்றிலையுள்ளதால் அதில் இருந்து விலகி தமிழ் மக்களின் நாதமாகிய வீணையில் போட்டியிடுகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் இரா.செல்வ வடிவேல் தெரிவித்தார். யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீர்ர் வசீம் தாஜுதீனின் புதைகுழி இன்று தோண்டப்பட்டு, அவரது சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. வசீம் தாஜுதீன் விபத்தில் மரணமாகவில்லை என்றும் அது ஒரு கொலை என்றும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், தாஜுதீனின் உடலைத் தோண்டியெடுத்து...
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறிய வடக்கைச்சேர்ந்த பெண்கள் மூவரை ஏமாற்றிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் சேனைகுடியிருப்பு பகுதியில் உள்ளி வீடொன்றில் தடுத்துவைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் மற்றும் பெண்கள் அறுவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகவரினால் தாக்குதலுக்கு உள்ளான பெண், தப்பியோடுவதற்கு முயற்சி செய்த போது ஏற்பட்ட...
நீர்வேலி பகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை ஒழுங்கமைத்த நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். நீர்வேலி பகுதியை சேர்ந்த நிஷாங்கன்(வயது26) என்ற இளைஞர் நேற்றய தினம் நீர்வேலி பகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கான பிரச்சார கூட்டம் ஒன்றை ஒழுங்கமைத்திருந்த நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது...
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் 1032 வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளன.விவசாயம்,மீன்பிடி,கால்நடை, சந்தைப்படுத்தல் மற்றும் கைத்தொழில் ஆகிய பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 75,000ரூபா பெறுமதியான...
வீடுகளில் துன்புறுதல், முறையற்ற குழந்தை பிரசவம், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்படும் பெண்களிற்கு தேவையான அடிப்படை பொருட்களடங்கிய அவசர பொதிகளை வழங்க UNHCR நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு பொதியும் ரூபா 2000 பெறுமதியான பொருட்களென 75 பொதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் குறித்த நிறுவனத்தினால் அண்மையில்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்றய தினம் யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார். இந்த...
இன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மாலை 4.00 மணிக்கு தொடக்கி நடை பெற்றது. இதில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பெருந்திரளானமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசாங்கத்தால் விரைவில் வழங்கப்படவிருக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனங்களில் வடக்கில் 90 விழுக்காடு சிங்களவர்களே இடம்பெற்றிருப்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். இந்நியமனங்கள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் மூன்று...
Loading posts...
All posts loaded
No more posts
