- Saturday
- August 16th, 2025

தற்கொலை முயற்சி செய்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 4 தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 வருடத்தில் கல்வி கற்ற மாணவி இவ்வாறு உயிரிழந்தவராவார். இம்மாணவி அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட ஆசிரியர்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து செயற்பட எண்ணியதை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. அவர்களின் பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முன்னாள் போராளிகளின் அமைப்பிற்கு ஓர் இடத்தையாவது வழங்க மறுத்தது வருந்தத்தக்க விடயம் மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதுமாகும். ஏன் இன்றும் த.தே.கூட்டமைப்பில்...

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரச நிறுவனங்களினூடாக தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுப்பது குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்களில் அதிக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றர். பதவி உயர்வு, புதிய நியமனங்கள் மற்றும் அரச வளங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள்...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார். இதனடிப்படையில் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும், நாளைய தினம் அதற்கான வேட்புமனு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர்...

கணப்பொழுதில் 147 உயிர்களை காவுகொண்ட நவாலி படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 1995ஆம் ஆண்டு இதே நாளில், பலாலி ராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தினரால், வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது, விமானப்படையினரும் அதற்கு ஒத்தாசையாக குண்டுகளை கணக்கின்றி வீசினர். மக்கள் அல்லோக கல்லோலப்பட்டு தமது...

இலங்கையின் பிரபல ஆண்கள் பாடசாலையாக விளங்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ இலட்சனை வெளியீட்டு நிகழ்வு திங்கட்கிழமை (06) கல்லூரியின் றொமைன்குக் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது. இலட்சனை வெளியீட்டு நிகழ்வில் யாழ். மெதடிஸ்மிஷன் திருச்சபை தேவாலய குருமுதல்வர் வண. ரவிசங்கர் நைல்ஸ் அடிகளார் கலந்துகொண்டு இலட்சனையை திரைநீக்கம்...

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறந்த வெற்றியைப் பெற்றாலும் அமைச்சரவையில் சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மாவை, அங்கு மேலும் கூறுகையில், 'தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழர்களின் பலத்தை...

கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான பத்மநாதன் பாவலனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரத்தில் அவரது பூதவுடலை யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். லண்டன் சர்ரே பகுதியிலுள்ள ரீகிரியேஷன் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் -...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியிலும், வன்னித் தேர்தல் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட புலிகள் இயக்க போராளிகள் தீர்மானித்து உள்ளனர். ஜனநாயக போராளிகள் கட்சி என்கின்ற பெயரில் அமைப்பு ரீதியாக இணைந்து உள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய கூட்டத்தில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் போராளிகள் ஒருமனதாக விடுத்த...

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காணாமற்போன உடுவில், மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தரான பிறேம்குமார் நிந்துஜன் (வயது 30) மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் (வயது 03) ஆகியோரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. இவர்கள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியால் ஒரு வருடத்துக்கு...

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குலுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியவிளான், இளவாலையை சொந்த முகவரியாகவும், ஏழாலை வடக்கு, ஏழாலையை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காணொளி ஆதரங்களுடன் குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர் என...

போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் 10ஆம், 11ஆம் மற்றும் 12ஆம் ஆகிய திகதிகளில் சகல மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு காலப்பகுதியை முன்னிட்டே இந்நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், அஅவர் பேசுகின்ற நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லாது போய்விடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். அங்கு...

அளவெட்டி தெற்கு பகுதியில் புனர்வாழ்வு பெறாமல் தங்கியிருந்த போது திங்கட்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை 75,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (07) அனுமதியளித்தார். அத்துடன், மேற்படி சந்தேகநபர் புனர்வாழ்வு பெற்றாரா, இல்லையா என்பது தொடர்பில் விசாரணை செய்து அடுத்த வழக்கு விசாரணையான ஓகஸ்ட்...

வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இன்று திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இலக்கம் 187, ஆடியபாதம் வீதியில் இன்று புதன்காலை 9 மணியளவில் திறந்துவைக்கப்பட்டதுடன் அலுவலகப் பணிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பிரதம செயலாளர் பத்திநாதன்...

கடந்த 2010ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார் எனக் கூறப்படும் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 4 இராணுவ வீரர்களில் தலைமறைவாகியுள்ள இராணுவ வீரர் ஒருவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் நான்காவது எதிரியாகிய இராணுவ வீரர் தலைமறைவாகி வெளிநாட்டுக்கு ஓடியிருந்தால், சர்வதேச பொலிஸார் மூலமாக அவரைக் கைதுசெய்வதற்கு...

இலங்கையில் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வதில் அரச துறைக்கும் தனியார் துறைக்கும் அடுத்தபடியாக, மூன்றாவது துறையாகக் கூட்டுறவுத்துறை உள்ளது. 'ஒருவர் அனைவருக்காகவும் அனைவர் ஒருவருக்காகவும்' என்ற உயரிய கோட்பாடோடு இயங்கும் கூட்டுறவுத்துறை சமூகத்தில் சகல மட்டங்களிலும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அந்த வகையில், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் முதற்படிக்கட்டாக, மாணவர் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர...

அரசியல் கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேற்படி கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோரின் பெற்றோர்களுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில், வவுனியாவில் திங்கட்கிழமை (06) சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது,...

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பல்வேறுபட்டவர்கள் ஊடுருவி வருவதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்காக...

All posts loaded
No more posts