வடக்கில் போட்டியிடுவதற்கு முக்கூட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் நபர்களும் இணைந்து முக்கூட்டை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இந்த புதிய கூட்டு போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு...

மீசாலையில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

சாவகச்சேரி - மீசாலை மேற்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கையாலபிள்ளை உதயநாதன் எனத் தெரியவந்துள்ளது. நேற்றயதினம் காலை 07.30 அளவில் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்று, பின் வீடு திரும்பியவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காலை...
Ad Widget

த.தே.கூ தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியா?

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் தொகுதிப் பங்கீடு, தமிழரசுக் கட்சி தவிர்த்த பிற கட்சிகளால் சுமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த முடிவுகள் ஒரு கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டதாகத் தெரிவதாகவும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டும் இந்த முடிவுகளை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக கூட்டமைப்பில் இணைந்துள்ள...

முன்னாள் போராளி கைது

அளவெட்டி தெற்கு பகுதியில் புனர்வாழ்வு பெறாமல் தங்கியிருந்த முன்னாள் போராளியை திங்கட்கிழமை (06) இரவு கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். சக்திவேல் இராஜகுமரன் (வயது 41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கடவுச்சீட்டு, நிலஅமைப்பு வரைபடங்கள், வங்கிப்புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளை...

மனோ கணேசன்- த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு !

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையகத்தில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் கருத்து கூறியதாவது, கூட்டமைப்புக்கும், எமது கட்சிக்கும்...

கூட்டணியில் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கத் தயார்: வீ.ஆனந்தசங்கரி

முன்னாள் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் சந்தர்ப்பம் வழங்க தயாராகவுள்ளதாக கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். எனினும் அப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில்,...

திருடனை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்: திருட்டுப்போன நகைகள் திரும்பின

கடந்த சனிக்கிழமை(04) திருட்டு போன சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- பருத்துறைய பகுதியில் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு உள் நுழைந்த திருடர்கள் அலுமாரியில் இருந்து 35 பவுண் நகையினை திருடி சென்றிருந்தனர். சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பருத்தித்துறை பொலிஸில் செய்த முறைப்பாட்டினை அடுத்து மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....

சட்டரீதியாகத் தண்டனை வழங்கும் கிளிநொச்சி நீதிமன்றின் தீர்ப்பில் தலையீடு செய்ய முடியாது!

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானமாகிய கசிப்பு மற்றும் கோடா காய்ச்சியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு ஒன்றில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையையும், அதே எதிரிக்கு அங்கு பிணை மனு மறுக்கப்பட்டதையும், மீளாய்வு செய்து அந்தத் தீர்ப்புக்களை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி யாழ்ப்பணம் மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான வழக்கிலேயே...

பெண்களுக்கு எதிராக வன்முறை: நீதி கோரி ஆர்ப்பாட்டம்

நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு நீதிக்கோரி யாழ். பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வேம்படி சந்தியில் தற்போது கூடியுள்ள குறித்த பெண்கள் அமைப்பினர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள்...

மின்சார சபையின் புதிய கட்டடம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண பதில் பொதுமுகாமையாளர் அலுவலகத்துக்கான புதிய ஐந்து மாடிக் கட்டடம் நேற்று திங்கள்கிழமை பகல் மின்சக்தி எரிபொருள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரண்வக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி சந்தியில் இருந்து பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலய மாணவர்களின் கீழைத்தேய வாத்திய நடனக் குழுவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் எரிபொருள் மின்சக்தி அமைச்சர்...

 மாணவிகள் மூவரைக் காணவில்லை என முறைப்பாடு

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை என திங்கட்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் சாதாரண தர மாணவிகள் மூவரும் திங்கட்கிழமை (06) மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவர்களுடைய பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு...

அதிபர் இடமாற்றத்தை கண்டித்து வல்வை சிதம்பரா கல்லூரி மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள், நேற்று திங்கட்கிழமை (06) வகுப்பு புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை (06) காலை பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள், பாடசாலை கதவினை மூடி பதாகைகளினை ஏந்தியவாறு, அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த மாணவர்கள், தமிழ்த் தேசியக்...

கூட்டமைப்பை பேரம் பேசும் சக்தியாக மாற்றுங்கள் – மாவை

மேலும் எட்டு வருடங்கள் ஆட்சியிலிருக்க கனவு கண்ட மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது போன்று, எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை வழங்கி நமது கட்சியை பேரம் பேசும் சக்தியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கைதடி, நவபுரம் சனசமூக நிலையத்தின்...

56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து ஆபாசப்படம் எடுத்தவருக்கு வலைவீச்சு!

முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். பெண்களை துஷ்பிரயோகம் செய்த குறித்த நபர் அரசியல் கட்சி...

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயன்றாராம்! முன்னாள் உறுப்பினர் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்லிப்பழையை சேர்ந்த சக்திவேல் ராஜ்குமாரன் (வயது -41) என்பவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். 119 இலக்கத்துக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விடுக்கப்பட்ட கட்டளையைத் தொடர்ந்தே...

வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதோர் விண்ணப்பிக்கவும்

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை ஓகஸ்ட் 01 ஆம் திகதியளவில் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க பிரதேச செயலாளர் அலுவலகங்கள் செயற்பட வேண்டுமென திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்....

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏன் உருவாக்கப்பட்டது? -கஜேந்திரகுமார் விளக்கம்

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தமிழ்த்தேசம் என்றால் என்ன? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏன் உருவாக்கப்பட்டது? போன்ற வினாக்களுக்கான விடைகளை திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்குகின்றார்.  2009 மே பின்னர் வரும் காலப்பகுதி தமிழர்கள் பலவீனமாக இல்லை, பூகோள அரசியலில் தமிழர்கள் மிகப்பெரும் பலமாகவே உள்ளனர் அதனை தமிழர் நலன் சார்ந்து அணுகுவதில் மக்களின் பிரதிநிதிகள் தவறவிட்டுள்ளனர். என்று...

கொள்கை ரீதியில் உடன்படக் கூடியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்! -த. தே. மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக தம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். அத்துடன், வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எமது கட்சி தனித்து போட்டியிடப் போகிறது.எமது கொள்கையான தேசியம்,...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு முடிவுக்கு வந்தது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 10 இடங்களில் 6 இடங்களில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள்,டெலோ 1 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம்...

முன்னாள் போராளிகளுக்கு கூட்டமைப்புக்குள் இடமில்லை: சம்பந்தன் திட்டவட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே சம்பந்தன் மேற்படி கூறியுள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரர்...
Loading posts...

All posts loaded

No more posts