வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இன்று திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இலக்கம் 187, ஆடியபாதம் வீதியில் இன்று புதன்காலை 9 மணியளவில் திறந்துவைக்கப்பட்டதுடன் அலுவலகப் பணிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பிரதம செயலாளர் பத்திநாதன் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.