- Thursday
- July 30th, 2026
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் கோரியமை போன்று மீண்டும் செயற்படவேண்டாம் என துணைவேந்தருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன், திங்கட்கிழமை (29) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிகிச்சையின் பின்னர் இன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு திரும்பியுள்ள நிலையில்,சனாதிபதித்தேர்தல் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ்தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது. இரண்டு வேட்பாளர்களும் வடக்கில் இருந்து இராணுவத்தினை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பிலான அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்படுகின்றது....
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் உருவாக்கும் புதிய அரசில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர். எனது...
நாட்டில் நிலவுகின்ற மிக மோசமான காலநிலையை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக பொத்துவில் வரை கரையோரபகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மலையகத்துக்கான ரயில் சேவைகள் முற்று முழுதாக இரத்து செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. அத்துடன், மட்டக்களப்புக்கான...
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எனவே நாம் எல்லோரும் நன்கு சிந்தித்துச் செயல்படுவோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எமது உறவுகள் கொத்துக் கொத்தாக வயது பால் வேறுபாடின்றி உடல் சிதறி இறந்ததையா? இறந்த உடல்கள் அதே இடத்தில் அழுகியதையா? கைது செய்யப்பட்டுக் காணாமற் போனவர்களையா? போர்...
மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை தொந்தரவு செய்தமையால் தபால்மூல வாக்களிப்பு நிலையம் ஒன்று காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மீதொட்டுமுல்லை, இலங்கை போக்குவரத்து சபை கட்டடத்தில் இன்று இயங்கிய தபால்மூல வாக்களிப்பு நிலையமே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கென வந்த ஊழியர்களை, ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சிலர் மகிந்தவுக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தியதில் ஏற்பட்ட முறுகல் நிலைமையே இதற்கு காரணம் என...
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வரம் கிடத்த போதிலும் அவர் தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம், நாடாளுமன்றத்தில் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நேற்று திங்கட்கிழமையுடன் இழந்தது. நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்களை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும், அந்த எண்ணிக்கை நேற்றுடன் 148ஆக குறைந்துள்ளது. இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து...
எமது விடிவுக்காக போராடிய முன்னாள் போராளிகளுக்கும், உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கும் 2015ஆம் ஆண்டில் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் உதவிகள் செய்யப்படும் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம்...
தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்புசார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும்...
ஜனாதிபதித் தேர்தலில் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் அவர்களாகவே தீர்மானிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒவ்வொரு தமிழரும் மிகக் கவனமாக பரிசீலித்து, வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்து யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி...
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் உடனடியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வென்றால், மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை 2015ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி செய்துகொள்வார். சில குழுவினர் கூறுவது போல இரண்டாவது பதவிக்காலத்துக்கான...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும் வரை வடபகுதி மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்து நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகார மனோநிலையில் இருக்கிறார். எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் இடைவெளியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும்...
சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்படும் என மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின், சுன்னாகம் நோர்தன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவொயில், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால், சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறி, தெல்லிப்பளை...
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டால், வடக்கில் மஹிந்த அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து அங்கு மக்கள் நிம்மதியாக உண்டு, உறங்க முடியாத அபாய நிலை ஏற்படும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. எனக்கு மனநோய் இல்லை. அந்த நோய் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டாவது பதவிக் காலத்துடன் ஆட்சியைக்...
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் குழப்பமடைந்தமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் அழைத்துவந்த சம்பந்தமில்லாத வெளியாள்களுமே காரணம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம், அடிதடி சண்டையாகியதில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வர் காயமடைந்தனர். இந்த...
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பில் தமது தரப்பைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்ப்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் இராஜ்குமார், அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான...
யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெரும் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை ஆளுங்கட்சியினருக்கும் , எதிர்கட்சியினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்து மோதலையடுத்து தண்ணீர் போத்தல்களால் இருதரப்பினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு இரத்தக்காயம் ஏற்பட்டதை...
சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை அனர்த்தப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட மக்களின் கையொப்பங்களுடன் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் இன்று திங்கள் கிழமை முற்பகல் வலி....
அரச புலனாய்வு பிரிவுனர் என அடையாளம் காட்டிக்கொண்ட நால்வரால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றிரவு 1௦.௦௦ மணியளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தாம் ஊரெழு இராணுவமுகாமை சேர்ந்த அரச புலனாய்வு பிரிவினர் எனக் கூறி யாழ், பேருந்து நிலையத்தில் வைத்து இரண்டாம் வருட மாணவன் ஒருவரை கைது செய்த இவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக...
ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின்...
Loading posts...
All posts loaded
No more posts
