- Sunday
- May 31st, 2026
சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை அனர்த்தப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட மக்களின் கையொப்பங்களுடன் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் இன்று திங்கள் கிழமை முற்பகல் வலி....
அரச புலனாய்வு பிரிவுனர் என அடையாளம் காட்டிக்கொண்ட நால்வரால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றிரவு 1௦.௦௦ மணியளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தாம் ஊரெழு இராணுவமுகாமை சேர்ந்த அரச புலனாய்வு பிரிவினர் எனக் கூறி யாழ், பேருந்து நிலையத்தில் வைத்து இரண்டாம் வருட மாணவன் ஒருவரை கைது செய்த இவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக...
ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின்...
தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார், சனிக்கிழமை (13) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப் பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனை அடுத்து சனிக்கிழமை (13)...
எமது வடமாகாண இளைஞர் யுவதிகள் நினைத்தால் எதனையும் சாதிக்கக் கூடிய சக்தி கொண்டவர்கள். இவர்களை ஊக்குவிக்க எமது விளையாட்டுத் திணைக்களம் காத்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் உதவினாலும் நீங்களே உங்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஐந்தாவது வர்ண இரவு விருது வழங்கும்விழா...
கண்டி வீதியருகே மிருசுவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய பின்னர், அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை தம்பாட்டில் கட்டி அமைத்துவிட்டு, பின்னர் தற்போது அந்தக் காணியை வலோற்காரமாக படைத்தரப்புக்கு எனச் சுவீகரிப்பதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு மேன்முறையீட்டு...
வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை அளிப்பது என்பது பற்றிய முடிவை பின்னர் தீர்மானித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
வடக்கு மாகாண முதலமைச்சரின் வசம் இருந்த சில அமைச்சின் கடமைகள், மேலதிக பொறுப்பக்கள் ஏனைய அமைச்சர்கள் மூவரிடம் மிக இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைச்சுக்களின் பொறுப்புக்களை குறித்த மூன்று அமைச்சர்களும் பொறுப்போற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. முதலமைச்சரின் வசம் இருந்து, கூட்டுறவுதுறை, நீர் வழங்கல் -...
பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் மன்னாரில் 5 ஆயிரம் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக செய்யப்படுவதாகவும் அந்நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும்; யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன், திங்கட்கிழமை (08) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலங்களிலும் அதற்கு பிற்பட்ட காலப் பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தில் இலங்கை அரசினால்...
இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தமிழர்களின் பிரச்சனை குறித்து சாதகமான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதனால் இருவேட்பாளர்களிலும் நாம் திருப்தியடைந்திருக்கவில்லை என தமிழ்தேசியக்கூட்டமைப்பு பேச்சாளர் நாடளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகம் ஒன்றுக்கு கருத்துகூறியுள்ளார். அரசுக்கட்சியோ சிறுபான்மையினரின் வாக்குகளில் தாம் தங்கியிருக்கவில்லை என கூறியுள்ளது. அதேவேளை மைத்திரி பால சிறிசேன அவர்களின் அண்மைக்கால கூற்றுக்கள் எமக்கு எதிரான...
யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற போது யாழ்ப்பாணத்து நீர் மாசடைதலை தடுக்க வேண்டும் என்ற...
தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை அரச புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஐந்து வருடங்களுக்கு பின்னர், சாம்பல்தீவில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. சாம்பல்தீவு மற்றும் நிலாவெளியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரினால் இவர்...
சுன்னாகம் அனல் மின்நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கோ அல்லது வடக்கில் புதிதாக வேறு அனல் மின்நிலையங்களைத் தாபிப்பதற்கோ மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கக்கூடாது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (04.12.2014) வடக்கு மாகாணசபையின் 20ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை மண்டபத்தில்...
கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து, அப்போதைய பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை இந்த அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது. அவருக்கு நடந்தவற்றை விட பல மடங்கு அதிகமானவை தனக்கு நடக்கும் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை, நேற்று புதன்கிழமை கொழும்பு –...
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த இராமநாதன் சிலை நேற்று இரவோடு இரவாக வெளிக் கேற்றினைப் பூட்டிவிட்டு பைக்கோ மூலமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் காரணமாகவே அது இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த பாடசாலையின் அதிபர், வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் முன்னிலையில் இந்தச் சிலை நேற்றிரவு அகற்றப்பட்டது....
போர் நிறுத்தக் காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்னம் மற்றும் இராணுவ கெப்டன் லக்கீ ஆகியோர் உள்ளடங்கலான 80பேர் தொடர்பான தடயவியல் ஆய்வு நேற்று செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான், இந்திமடு, சமளன்குளம் ஆகிய பகுதிகளில், கடந்த 2006ஆம் ஆண்டு...
மத்திய அரசாங்கத்தினால் மட்டுமல்ல வடக்கு மாகாண அரசாலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக உணர்வதாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயந்து அகதி முகாம்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர். நேற்று இப்பகுதி மக்கள் மழையால் எதிர்கொள்ளும் அவலங்களை பார்வையிட்ட செய்தியாளர்களிடம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் இருக்க இடம்கூட இன்றி அந்தரிக்கும் இந்த மக்கள்,...
நாட்டை காக்கும் நீலப்படையணி' என்னும் தொனிப் பொருளில் ஆளும் கட்சி நாடு முழுவதிலும் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. அதன் ஓர் கட்டமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 30ம் திகதி யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லுரியில் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இந்தக்...
கொழும்பில் நாளை நடைபெறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள அழைப்புக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அப்பாவி மக்களை இலகுவாக ஏமாற்றுவது போல எம்மையும் ஏமாற்றப்பாக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பல்கலைக்கழக ஆசிரியர்களைச் சிந்தித்துச்...
Loading posts...
All posts loaded
No more posts
