- Thursday
- July 30th, 2026
புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது. இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடர முடியாத நிலையில் அந்தப் பதவியை பிரதி அமைச்சர்...
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார். அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....
தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு...
வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சாராத ஒரு சிவிலியன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர் பலிஹக்கார ஆளுநராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். அங்கு ஆளுநராக இருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பலிஹக்கார முன்னர் ஜெனீவாவிலுள்ள...
´திவிநெகும´ வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மீளப் பெறுவது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்துமகலுகே வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் வௌியிடப்பட்டுள்ளது. திவிநெகும...
யாழில் எட்டு லட்சம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் 35 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழ். ஊரெழுவை சேர்ந்த ஒருவருக்கு நேற்று திங்கள்கிழமை காலை தொலைபேசி அழைபொன்று வந்துள்ளது. தாம் குறித்த ஒரு தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இருந்து கதைப்பதாகவும் எமது நிறுவனத்தால் நீங்கள் அதிஸ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் எனவும்...
இன்று மாலை 6.30 மணிக்கு இலங்கை சனாதிபதி செயலகத்தில் 27 பேர் கொண்ட இலங்கையின் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. 1) ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் 2)ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் 3)மங்கள சமரவீர- வெளிவிவகாரம் 4)கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் 5)ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் 6)காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு...
அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லை, வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். - இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என அறிய வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேசியபோதே சம்பந்தன் அவருக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருபவை வருமாறு:- தமிழ்த்...
மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர், நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகாரசபையின் தலைவராகவும் 2009-13 காலப்பகுதியில் HSBC வங்கியில் முகாமைத்துவ பணிப்பாளராகவும் தொழிற்பட்டிருந்தார் மேலும் எமிரேற்ஸ் NDB...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் எமிரேட்ஸின் ஈ.கே.349 விமானத்தில் தனது மனைவியுடன் சென்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான...
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னராக காலப்பகுதி மிகவும் அமைதியானதாக இருக்கின்றது. வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ள இராணுவப்பேச்சாளர் ருவன் வணிகசூரிய, வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மீது கல்வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் எந்தவொரு இடத்திலேயேயும் விடுதலை புலிகளின் கொடி ஏற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வடக்கில்...
தேசிய அரசியலில் இணைவதற்கு புதிய அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர்கள் 60 பேர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரனுக்கு மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே...
பெரும்பான்மையினரும் சிறுபான்பான்மையினரும் இணைந்து நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளோம். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு சிறந்த அத்திவாரம் மைத்திரிபால சிறிசேன என, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில் வடக்கு முதலமைச்சர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 06.21 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு பதவி பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் நாட்டு...
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்திருக்கிறார். தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, " என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைதியான மற்றும் ஜனநாயகமான தேர்தலை முன்னெடுப்பதற்காக ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில் - விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகின்றது
யாழ்.பருத்தித்துறை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று வியாழக்கிழமை (08) காலையில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு - 2 இன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யவ்பர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
யாழ். மாவட்டத்தின், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 133 கிராம அலுவலர் பிரிவை (கூழாவடி) சேர்ந்த 5 பேரின் 0.3492 ஹெக்டேயர் காணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமென் 'பி' அணிக்கான நிலையத்தை அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், எதிர்வரும்...
வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...
Loading posts...
All posts loaded
No more posts
