Ad Widget

நிதி அமைச்சின் செயலாளராக அருச்சுண் மகேந்திரன்

arujunaமூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர், நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகாரசபையின் தலைவராகவும் 2009-13 காலப்பகுதியில் HSBC வங்கியில் முகாமைத்துவ பணிப்பாளராகவும் தொழிற்பட்டிருந்தார் மேலும் எமிரேற்ஸ் NDB வங்கியின் முதலீட்டு அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார்.

முன்னதாக அவரது பெயர் மத்தியவங்கியின் ஆளுனர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts