Ad Widget

குடாநாட்டு ஆலயங்களில் பூசை விபரங்களை தீவிரமாகச் சேகரிக்கும் இராணுவம்

யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள பூசை, வழிபாடுகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர்.

மாவீரர் தினம் கடந்த 21 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது. நாளை புதன்கிழமை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம் கொண்டாடப்படவுள்ளதுடன், நாளை மறுதினம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை மாவீரர் தினம் அனுட்டிக்கப்படவுள்ளது.

குறித்த தினங்களிலேயே விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சஸ்டி என்பனவும் வருகின்றன.

இந்த நிலையில் மேற்படி இரு தினங்களிலும் குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இரு தினங்களிலும் ஆலயங்களில் இடம்பெறும் பூசை வழிபாடுகள் தொடர்பில் இராணுவப் புலனாய்வாளர்களால் விபரம் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

முக்கியமான ஆலயங்களின் வீதிகளில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் காணப்படுவதோடு ஆலயங்களில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக ஆலயங்களில் நடைபெறும் பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ளப் பொதுமக்கள் அச்சப்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

Related Posts