காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம் என யாழ். பொலிஸ் நிலையத்தில் மகன் முறைப்பாடு செய்துள்ளார்.

சுன்னாகம் சூராவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வீரசிங்கம் அம்பிகைபாகன் என்பவர் கடந்த 23ஆம் திகதி காதுக் குத்து காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கண், காது, தொண்டை (ENT) சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் 41ஆம் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அந்நிலையில், தந்தையின் மரணத்திற்கு வைத்தியர்களின் தவறே எனத் தெரிவித்து மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.