Ad Widget

யாழ். பல்கலை வளாகத்தில் மாவீரர் சுவரொட்டிகள்!

“தாயக விடுதலைக்காய் வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரும் ஒன்றிணைவோம்” என்று எழுதப்பட்ட சுவர் ஒட்டிகள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தன எனத் தெரிவிக்கப்பட்டது.

november27-notes-maveera-naal

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட கலைப்பீட கட்டடத் தொகுதிக்குள்ளேயே மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

நேற்று வியாழக்கிழமை காலையில் காணப்பட்ட அந்தச் சுரொட்டிகள் சிலமணி நேரங்களுக்குள் அங்கிருந்து அகற்றப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மாவீரர் தாகத்தை மனதில் ஏந்தி வணக்கம் செலுத்த ஒன்றிணைவோம்” என்ற தலைப்புடன் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் காணப்பட்ட அந்தச் சுரொட்டிகளில் கார்த்திகை 27 என எழுதப்பட்டிருந்தது.

மேலும் அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததுடன், மாவீரர் தின இலட்சனையும் பொறிக்கப்பட்டிருந்தது. “தாயகம் மலர தன்னுயிர் தந்த மாவீரர்களுக்கும், அரச பயங்கரவாதத்தினால் கொல்லப்பட்ட எம்மவர்க்கும் எங்களின் கண்ணீர் சிந்திய வீர வணக்கங்கள்” என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதுமட்டுமல்லாமல் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அந்தச் சுவரொட்டியில் தீபங்களில் புகைப்படங்களும் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவரொட்டிகள் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பல்கலைக்கழக வளாகத்தைச் சூழ பெருமளவு இராணுவ, பொலிஸ் புலனாய்வாளர்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் மாவீரர் தினம் நெருங்கும் வேளையில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts