Ad Widget

பயங்கரவாதத்துக்கு இடமில்லை: இராணுவம்

இலங்கையில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கான நிலைமை உள்ளதாக சர்வதேச ரீதியில் பல ஊடகங்கள் பிழையான பிரசாரத்தை முன்னெடுத்து செல்கின்றன. இவை முற்றிலும் தவறான கருத்துக்கள்.இனி இலங்கையில் ஒருபோது பயங்கரவாதத்துக்கு இராணுவம் இடமளிக்காது என இராணுவபேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

ruwan-vanika-sooreyaa

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இலங்கையில் பயங்கரவாதம் மீண்டு நிலவுவதற்கான நிலைமை உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இலங்கையில் மட்டுமன்றி 13 நாடுகளில் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக அந்த செய்திகளில் கூறப்படுகின்றபோதும் இலங்கையில் அவ்வாறான ஒரு நிலைமை இல்லை.

கடந்த 3 தசாப்த காலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நாட்டிலிருந்து ஆயுத ரீதியலான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் வாழும் சிலரால் பிரிவினைவாதம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் இன்னுமொரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுகளிலுள்ள சிலர் குழுக்கள் செயற்படுகின்றனர்.

எனினும் மீண்டும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கோ, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளுக்கோ இராணுவம் ஒருபோதும் இடம்தராது என்றார்.

தொடர்புடைய செய்தி

இலங்கையில் மீளவும் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்து!!

Related Posts