Ad Widget

சந்திரிகா – ரணில் – சம்பந்தன் கூட்டாக மந்திராலோசனை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து மந்திராலோசனை நடத்தினர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

chandrka -ranil -sampanthan

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கும் வகையில் பொது எதிரணியின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கு முயற்சியில் தொடர்ந்து சர்ச்சைகளும் இழுபறியும் காணப்படுகின்றது இந்த நிலையில் எதிரணித் தலைவருடன் தனித்தனி சந்திப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மத்தியிலும் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சந்திப்புக்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனும் நேற்று திங்கட்கிழமை கலந்துரையாடல்களை நடத்தினார் என எதிரணித் தகவல்கள் தெரிவித்தன.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதற்கு பொது வேலைத்திட்டம் மற்றும் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அக்கட்சியின் தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜயசூரிய ஆகியோரை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts