- Friday
- July 31st, 2026
சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். நேற்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்...
இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ்ப் பெண்கள் மற்றும் மகளிர் மீது அவர்களின் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தும் சாக்கில் பாலியல் துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து அறிக்கையிடப்பட்டு வருகின்றது. - இவ்வாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தாம் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார். முரண்பாடுகள் தொடர்பான பாலியல்...
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு பெரும்பான்மை வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்." - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். கொழும்பில் வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு...
கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....
இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஸ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அத்துடன் அரசால் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்கவோ அல்லது அவ்வாறான சூழல் மீண்டும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும்...
சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் அக்கறையற்ற போக்கினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது இந்த விவகாரத்தில் அரசியல் கலந்திருப்பதாகக் கூறி, மக்களை ஏமாற்றப் பார்க்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும்...
யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் அடுத்த கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார். 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கம் அறிவித்த அறிவிப்புக்கமைய முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும், வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள்...
சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும், கிறீஸும் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார். சுன்னாகம் பிரதேசத்தின் கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என்று...
தேர்தல் சட்டம் மற்றும் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய எதிர்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசு கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை தமிழரசு கட்சி தமது வாதத்தை முன்வைத்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இரண்டாவது கட்டமாக மேலும் 570 ஏக்கர் காணி மீள் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது. இன்று (10) வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 570 ஏக்கர் காணிகளை பார்வையிட மீள்குடியேற்ற செயலணி மற்றும் அரச அதிபர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் செல்லவுள்ளனர். பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1000...
தூயநீருக்காக நல்லூர் முன்றலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த உண்ணாவிரதப் போராதப் போராட்டம் ஆளுனர் பள்ளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் போன்றோரது நேரடித் தலையீட்டினால் சற்று முன்னர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதிகள் அமர்ந்திருந்த நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுனரும், அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர்மாசடைதல் தொடர்பாக உண்ணாவிரதிகளின் முக்கிய கோரிக்கைகளுக்குச்...
யாழ்.தூயநீருக்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் நேரில் கலந்துரையாடச் சென்றிருந்த நிலையில், முதலமைச்சர் விடுத்த கோரிக்கைகளை ஏற்கமறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். நேற்றய தினம் யாழ்.மாவட்டத்தில் தூய குடிநீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரும் கலந்துகொள்ள கூடாது என முதலிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது....
தூய நீருக்காக உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் செய்தி சேகரித்த பின்னர் வீடு திரும்பிய மூன்று ஊடகவியலாளர்களை கத்தியுடன் சிவில் உடை தரித்த இருவர் மோட்டார் சைக்கிளில் துரத்திய சம்பவம் ஒன்று நேற்று இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர் மயூரப்பிரியன் கூறுகையில், நல்லூர் முன்றலில் தூய நீருக்காக உண்ணாவிரத போராட்டத்தில்...
வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பில் வடமாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கையின் விளக்கத்தை எழுத்துமூலம் தருமாறு கோரி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் 8 பேர் சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் நீரில் நச்சுப்பதார்த்தங்கள் இல்லையென்றால் அந்நீரை பொதுமக்கள் பருகலாமா என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்பது அவர்களது பிரதான...
யாழ் குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் தலையாய பணியில் நிபுணர்கள் அனைவரையும் வடக்கு மாகாணசபையுடன் கரம் கோர்க்குமாறு வேண்டி நிற்கிறோம் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (07.04.2015) வடக்கு மாகாணசபையின் 27வது அமர்வு நடைபெற்றபோது சுன்னாகம் நிலத்தடிநீரில் எண்ணெய் மாசு தொடர்பான...
உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மரு மகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஷ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்க, நைஜீரியாவில் இயங்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்திருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. [caption id="attachment_42831" align="aligncenter" width="494"]...
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 7...
வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து அகற்றப்படமாட்டாது என,இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டிசில்வா,தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் மீண்டும் ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.தேசிய பாதுகாப்புக்கோ அல்லது...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான பயணம் அரசியல் ரீதியானது. எனவே, மக்களின் பிரதிநிதி என்ற முறையில் அவரது கூட்டங்களில் தான் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (02) தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...
மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். மகிந்த அரசின் கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர் உறவுகளைத் தொலைத்தனர், உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற...
Loading posts...
All posts loaded
No more posts
