Ad Widget

சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேகநபர் பொலிஸாரால் கைது!

அளவெட்டி, கும்பளாவளை பகுதியில் 14 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர். நேற்று அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு வீட்டில் குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர்...

கைதாகிய 129 பேர் தொடர்பில் முன்னிலையாகப்போவதில்லை என நாங்கள் தீர்மானிக்கவில்லை!

யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 129 பேர் தொடர்பில் நீதிமன்றில் ஆயராகப் போவதில்லை என தாங்கள் தீர்மானிக்கவில்லை என வவுனியா சட்டத்தரணிகள் சங்க தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யாழில் மாணவி...
Ad Widget

நீதிமன்ற விவகாரம்; 129பேரும் அநுராதபுரம், வவுனியா சிறைகளுக்கு மாற்றம்

யாழ். மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை (20) நடைபெற்ற ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 129 பேரும், வவுனியா மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் போதிய இடவசதி இன்மையால் இவர்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர். 129பேரும் 3 பஸ்களில் பவள் கவச வாகன பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தின்...

வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட சுவிஸ் பிரஜை எவ்வாறு கைதானார் : விளக்குகின்றார் துவாரகேஸ்வரன்

புங்குடுதீவில் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட நபர்களில் முதலில் மூன்று சகோதரர்கள் கைதானார்கள். அவர்களைத்தொடர்ந்து சுவிஸ் பிரஜை உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு தற்போது பொலிசாரின் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுவிஸ் பிரஜையான மகாலிங்கம் சசிகுமார் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து...

தாக்குதலுக்குள்ளான நீதிமன்றத்தை பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் பார்வையிட்டார்

நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (20) குழப்பம் விளைவித்தவர்களால் தாக்குதலுக்குள்ளான யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியை பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன் வெள்ளிக்கிழமை (22) பார்வையிட்டார். நீதியரசருடன் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனும் வந்திருந்தார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த புதன்கிழமை (20) நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றனர் எனக்கருதிய சிலர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு, பொலிஸாரின் பாதுகாப்பு...

யாழ்.மக்களிற்கு பொலிஸ் திணைக்களம் விடுத்த விசேட செய்தி!

புங்­குடுதீவு மாணவி வித்தியா படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் இது வரை கைது செய்­யப்­பட்­டுள்ள ஒன்­பது சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அவர்­களில் எவரும் தப்­பிக்க முடி­யாது. பொலிஸ் மா அதி­பரின் நேரடி கட்­டுப்­பாட்டில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் சந்­தேக நபர்கள் தப்­பிக்­கவே முடி­யாது. சட்டம்...

வேலணையில் இளம்பெண்ணை காணவில்லை!

வேலணைப் பகுதியில் இளம் பெண்ணொருவரைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இரவுவரை வீடுதிரும்பாததை அடுத்து நேற்றிரவு அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 மட்டக்களப்பில் ஹர்த்தால்

புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கடைகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், பொதுச்சந்தை, அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்களும் குறைவாக உள்ளன.

துண்டிக்கப்பட்ட கைவிரலை விட்டு ஒருவர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இருந்து துண்டிக்கப்பட்ட கைவிரல் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் சிக்கிய ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு முன்னர் பாதுகாப்பு கருதி போடப்பட்ட இரும்பு கம்பிக்குள் அகப்பட்ட நிலையிலேயே விரல் நுனி மீட்கப்பட்டுள்ளது. நேற்று...

இலங்கை மின்சாரசபை உத்தியோகத்தர்களின் அசமந்தப் போக்கு

யாழ். வடமராட்சி கரணவாய் வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வதரி துலாக்கட்டு வீதியில் உள்ள மின் கம்பம் நேற்று காலை 10.00 மணி அளவில் சரிந்து விழுந்த நிலையில் இவ் வீதியால் பயணிக்கும் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டது. இவ்விடயத்தினை அப் பகுதி மக்கள் உடனடியாக கரவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையினருக்கு அறிவித்தல்...

புலிகளும் இப்படித்தான் ஆரம்பித்தார்கள் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த

புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு,கிழக்கில் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தோடு ஒப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறு தான் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது.என்றார் அவர்,யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்களின் பின்னால் ஒரு குழுவினர் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்....

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விண்ணப்பப்படிவம் விநியோகம்

வடமாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் கொடுப்பனவை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,500 ரூபாயும், கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000 ரூபாயும் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள சமூக சேவைகள்...

பொதி செய்த மணல் விற்பதற்கு நடவடிக்கை – வடமாகாண முதலமைச்சர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கட்டடத் தேவைகளுக்கு தேவையான மணலை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மணலை பொதி செய்து வழங்குவது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் வியாழக்கிழமை (21)...

யாழ் – திருமலை இ.போ.ச பஸ்கள் மீது வவுனியாவில் தாக்குதல்!

யாழில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது வவுனியாவில் வைத்து நேற்று மாலை 7 மணியளவில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழில் இருந்து திருகோணமலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் மீது வவுனியா, தாண்டிக்குளம், சோயா வீதிப் பகுதியில் வைத்து மோட்டர் சைக்கிள் ஒன்றில்...

யாழ். நீதிமன்றத் தாக்குதலின் பின்னணியில் ஒட்டுக்குழுக்கள்! – சி.சிறிதரன்

வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரி பல கோணங்களில் நடத்தப்படும் போராட்டங்களை சிங்களவர்களுக்கு எதிரான நடவடிக்கையென மாயையொன்றை உருவாக்குவதற்கு ரெளடி கும்பலொன்று முயற்சிக்கிறது என்றும், இதன் பின்புலத்தில் இராணுவ ஒட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நீதிமன்றத்தின் மீதும் இந்தக் குழுதான் தாக்குதல் நடத்தியதாகவும், விசாரணைகளை திசைதிருப்புவதற்கு...

யாழ். நீதிமன்றம் மீது தாக்குதல்: வடக்கு சட்டத்தரணிகள் இன்று செயற்பாடுகளை புறக்கணிக்கின்றனர்! கைதானவர்களுக்காகவும் ஆஜராகார்!!

யாழ். நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களுக்காகவும் வட மாகாணத்தைச் சேர்ந்த எவரும் நீதிமன்றில் முன்னிலையாகமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நீதிமன்றக்...

பொலிஸார் துரிதமாக செயற்பட்டிருந்தால் வித்தியாவின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்!

பெற்றோர்கள் பிள்ளையைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறையிட்ட உடனேயே அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவி வித்தியாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 29வது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவிக்கு அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது. அந்த...

மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம் பெறப்பட்டமை உறுதி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சில நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமாயின் தேர்வாளர்கள் சிலருக்கு பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதென முறைப்பாடுகள் முன்வைக்கப்படடன....

வித்தியாவிற்கு நீதிகோரி சிங்கள மக்களும் போராட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்காக முழு தமிழினமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த கொடுமைக்கெதிராக இனம்,மதம், மொழி கடந்து சிங்கள மக்களும் கிளர்ந்துள்ளனர். இன்று புத்தளத்தில் திடீரென புத்தளமக்கள் நீதிகோரி போராட்டம் நடத்தினார்கள். புத்தளம் நகரில் அமைதியான முறையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் தமிழ், சிங்கள மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த போராட்ட களத்தில்...

வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

வன்முறையில் ஈடுபட்டனர் என்று குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 129 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தினர் மற்றும் நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றின் மீதும், வாகனங்கள் மீதும் கற்களை வீசினர் என்ற குற்றச்சாட்டில் நேற்று புதன்கிழமை 129 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று வியாழக்கிழமை...
Loading posts...

All posts loaded

No more posts