Ad Widget

துண்டிக்கப்பட்ட கைவிரலை விட்டு ஒருவர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இருந்து துண்டிக்கப்பட்ட கைவிரல் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் சிக்கிய ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு முன்னர் பாதுகாப்பு கருதி போடப்பட்ட இரும்பு கம்பிக்குள் அகப்பட்ட நிலையிலேயே விரல் நுனி மீட்கப்பட்டுள்ளது. நேற்று...

இலங்கை மின்சாரசபை உத்தியோகத்தர்களின் அசமந்தப் போக்கு

யாழ். வடமராட்சி கரணவாய் வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வதரி துலாக்கட்டு வீதியில் உள்ள மின் கம்பம் நேற்று காலை 10.00 மணி அளவில் சரிந்து விழுந்த நிலையில் இவ் வீதியால் பயணிக்கும் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டது. இவ்விடயத்தினை அப் பகுதி மக்கள் உடனடியாக கரவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையினருக்கு அறிவித்தல்...
Ad Widget

புலிகளும் இப்படித்தான் ஆரம்பித்தார்கள் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த

புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு,கிழக்கில் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தோடு ஒப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறு தான் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது.என்றார் அவர்,யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்களின் பின்னால் ஒரு குழுவினர் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்....

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விண்ணப்பப்படிவம் விநியோகம்

வடமாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் கொடுப்பனவை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,500 ரூபாயும், கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000 ரூபாயும் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள சமூக சேவைகள்...

பொதி செய்த மணல் விற்பதற்கு நடவடிக்கை – வடமாகாண முதலமைச்சர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கட்டடத் தேவைகளுக்கு தேவையான மணலை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மணலை பொதி செய்து வழங்குவது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் வியாழக்கிழமை (21)...

யாழ் – திருமலை இ.போ.ச பஸ்கள் மீது வவுனியாவில் தாக்குதல்!

யாழில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது வவுனியாவில் வைத்து நேற்று மாலை 7 மணியளவில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழில் இருந்து திருகோணமலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் மீது வவுனியா, தாண்டிக்குளம், சோயா வீதிப் பகுதியில் வைத்து மோட்டர் சைக்கிள் ஒன்றில்...

யாழ். நீதிமன்றத் தாக்குதலின் பின்னணியில் ஒட்டுக்குழுக்கள்! – சி.சிறிதரன்

வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரி பல கோணங்களில் நடத்தப்படும் போராட்டங்களை சிங்களவர்களுக்கு எதிரான நடவடிக்கையென மாயையொன்றை உருவாக்குவதற்கு ரெளடி கும்பலொன்று முயற்சிக்கிறது என்றும், இதன் பின்புலத்தில் இராணுவ ஒட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நீதிமன்றத்தின் மீதும் இந்தக் குழுதான் தாக்குதல் நடத்தியதாகவும், விசாரணைகளை திசைதிருப்புவதற்கு...

யாழ். நீதிமன்றம் மீது தாக்குதல்: வடக்கு சட்டத்தரணிகள் இன்று செயற்பாடுகளை புறக்கணிக்கின்றனர்! கைதானவர்களுக்காகவும் ஆஜராகார்!!

யாழ். நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களுக்காகவும் வட மாகாணத்தைச் சேர்ந்த எவரும் நீதிமன்றில் முன்னிலையாகமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நீதிமன்றக்...

பொலிஸார் துரிதமாக செயற்பட்டிருந்தால் வித்தியாவின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்!

பெற்றோர்கள் பிள்ளையைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறையிட்ட உடனேயே அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவி வித்தியாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 29வது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவிக்கு அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது. அந்த...

மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம் பெறப்பட்டமை உறுதி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சில நிர்வாகிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமாயின் தேர்வாளர்கள் சிலருக்கு பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதென முறைப்பாடுகள் முன்வைக்கப்படடன....

வித்தியாவிற்கு நீதிகோரி சிங்கள மக்களும் போராட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்காக முழு தமிழினமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த கொடுமைக்கெதிராக இனம்,மதம், மொழி கடந்து சிங்கள மக்களும் கிளர்ந்துள்ளனர். இன்று புத்தளத்தில் திடீரென புத்தளமக்கள் நீதிகோரி போராட்டம் நடத்தினார்கள். புத்தளம் நகரில் அமைதியான முறையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் தமிழ், சிங்கள மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த போராட்ட களத்தில்...

வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

வன்முறையில் ஈடுபட்டனர் என்று குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 129 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தினர் மற்றும் நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றின் மீதும், வாகனங்கள் மீதும் கற்களை வீசினர் என்ற குற்றச்சாட்டில் நேற்று புதன்கிழமை 129 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று வியாழக்கிழமை...

வித்தியாவிற்கு வடக்கு அவையில் அஞ்சலி

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு சிறுமிக்கி வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் புங்குடுதீவில் வன்புணர்விற்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவிற்கு ஏகமனதாக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி...

வீ.ரி தமிழ்மாறன் மன்றில் ஆஜர்ப்படுத்தப்படார் – வடக்கு டிஐஜி

அசாதாரண சூழ்நிலையில் சமாதானத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள முடியும் என்று வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார். வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. அதன்போது, கடந்த 19 ஆம்...

மாணவிக்கு இழைக்கப்பட்ட ஈனச் செயல்களுக்கு நீதி கிடைக்காமற் போவதற்காகவா வன்முறைகள்? மாவை எம்.பி

புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஈனச் செயல் புரிந்தவர்ர்களைத் தங்கள் கைகளில் தர வேண்டுமென வன்முறையில் ஈடுபடுவது அந்த மாணவிக்கு இழைக்கப்பட்ட ஈனச் செயல்களுக்கு நீதி கிடைக்காமற் போவதற்கே இச் செயல்கள் இட்டுச் செல்லப்படுகின்றனவா? என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று யாழில் இடம்பெற்ற வன்முறைகள்...

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம்! அரசியலாக்கி, கேவலப்படுத்தாதீர்! பாரபட்சமற்ற விசாரணைக்கு தயவு செய்து ஒத்துழையுங்கள்! – டக்ளஸ்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலைச் சம்பவத்தை அரசியலாக்கி, அதில் இலாபம் தேடிக் கொள்வதற்கு சில சுயநல அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன. இதன்மூலம் அம் மாணவியின் நற்பெயரை கேவலப்படுத்தும் செயற்பாடுகள் தொடரப்படுகின்றன. இது அம் மாணவியின் குடும்பத்தாரின் மன வேதனையை அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, இவ்வாறான கேவலமான செயற்பாடுகளில் இறங்குவதை இச்சக்திகள் தவிர்த்துக்கொள்வதுடன், நியாயமான...

தமிழ் சிவில் சமூக அமையம் நீதிக்கான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு

தமிழ் சிவில் சமூக அமையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாடசாலைச் சிறுமி ஒருவர் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தமிழ் சமூகத்தை மீண்டும் துன்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. மரணித்தவரின் குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்ற அதே வேளை அவர்களது நீதிக்கான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். உரிமைக்காகப்...

வழமை நிலைக்கு திரும்பியது யாழ். நீதிமன்றம்

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் புதன்கிழமை (20) ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களைத் தொடர்ந்து வியாழக்கிழமை (21) நீதிமன்றம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், புதன்கிழமை (20) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்ற தகவலின் அடிப்படையில், நீதிமன்றத்துக்கு அருகில் கூடியவர்கள் குழப்பங்களில் ஈடுபட்டனர். பொலிஸாரின் பாதுகாப்பு வேலியை உடைத்து உள்நுழைந்தவர்கள், நீதிமன்ற கட்டடத்துக்கு கற்கள் வீசி...

மாணவி கொலைச் சந்தேகநபர்களுக்கு டீ.என்.ஏ பரிசோதனை

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர்,...

சட்டமும், நீதியும் பணத்துக்கு விலை போகுமோ? : கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மாணவிக்கு நீதி கோரியும் கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்று கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரிக்கு முன்பாகவே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மானம் போக்கிய மானிடரை மன்னிக்காதே, தண்டனையை தயங்காமல் வழங்கு...
Loading posts...

All posts loaded

No more posts