போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் மோடியுடன் ரணில் இன்று முக்கிய பேச்சு

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் விடயத்தில் ஜெனிவாவில் இந்தியாவின் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்காகவும் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை இந்தியா பயணமாகவுள்ளார். இன்று இந்தியாவின் தலைநகர் டில்லிக்குப் பயணமாகும் பிரதமர்...

ஜெனீவா கூட்டத்தொடர் இன்று : இலங்கை போர் குற்றம் பற்றிய விசாரணை அறிக்கை தாக்கல் ஆகிறது

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று(திங்கட்கிழமை) தொடங்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில்...
Ad Widget

ஆசிரியர் வெற்றிடங்களை வருட இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை!

நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகளில் நிலவும் சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் இவ்வருட முடிவிற்குள் நிரப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சு விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்துள்ளார். கிராமப்புற கஷ்டப் பிரதேச பாடசாலைகளிலேயே அதிகளவான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், கணிதம், விஞ்ஞானம், பௌதீகவியல், தொழில்நுட்பவியல், பாடங்களுக்கு கூடுதலான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர்...

ஜெனிவா செல்கின்றார் சிவாஜிலிங்கம்

யாழில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாளை (இன்று) மனு ஒன்றை கையளிக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என மேற்கொள்ளப்படுகின்ற நடைபவணியின் நிறைவு நாளான இன்று இந்த மனு கையளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்...

உலக சிறுவர் தின நிகழ்வு இம்முறை யாழ்ப்பாணத்தில்! – அமைச்சர் விஜயகலா

உலக சிறுவர் தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்று சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் சிறுவர் தின நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டது. வித்தியா என்ற பாடசாலை மாணவியின் மரணம், வடக்கில் இடம்பெற்று வரும் அதிகளவான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் போன்ற காரணிகளினால் பிரதேச சிறுவர்...

மாவையுடன் முரண்பாடா?, கூட்டமைப்புக்குள் குழப்பமா? – முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதில்

கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக்...

உள்ளக விசாரணையில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பில்லாத போது நீதியான விசாரணை நடக்காது!

உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும். இது முழுமையாக ஏமாற்று வேலையே என்பதனை தமிழரசுக்கட்சியின் தலைமையும் அறிய வேண்டும் என முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் அக்கட்சியின் அலுவலகத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து...

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அயராது பாடுபடுவோம்! – ஜெனிவா பயணமாக முன் சுமந்திரன்

இலங்கையில் அரச படைகளினால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அயராது பாடுபடுவோம்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். "தமிழர் நீதிக்கான...

மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும்

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நேற்று காலை மகாநாயக்க மற்றும் அஸ்கிரிய பீட தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட...

ஏ9 வீதியில் வயோதிபரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, ஏ9 பரந்தன் வீதியில் வயோதிபரின் சடலமொன்று பலத்த காயத்துக்குள்ளான நிலையில் நேற்று சனிக்கிழமை (12) காலை மீட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் பயணித்த குறித்த வயோதிபரை, வெள்ளிக்கிழமை இரவு வாகனமொன்று மோதிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் நேற்று காலை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த வயோதிபர் யார்...

மூன்றாவது நாளாகத் தொடரும் நடைபயணம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் இன்று 3 ஆம் நாள் பளையிலிருந்து தொடங்கியது. நேற்று வெள்ளிக்கிழமை ஆனையிறவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் பளையுடன் நிறைவு செய்யப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் பளையிலிருந்து யாழ். நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே...

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தின் திருச்சி சிறப்பு அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் ஐந்துபேர் காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா வந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னையில் இருந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர். பின்னர் திருச்சி மத்திய...

பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த இருவருக்கு விளக்கமறியல்

நெல்லியடி பஸ் நிலையத்தில் பெண்களுக்கு தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு கொடுத்த இருவரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார். பஸ்ஸூக்காக காத்திருக்கும் பெண்களுக்கு அநாகரீகமான சைகள் காட்டியும் கடதாசியில் தங்கள் அலைபேசி இலக்கங்களை எழுதி பெண்களுக்குக் கொடுக்க முனைந்த இரண்டு சந்தேகநபர்களையும் சிவில்...

யாழ். ஆவரங்காலில் மினி வான் – லொறி கோர விபத்து

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் ஆவரங்கால் சந்தியில் இன்று காலை 10.30 மணியளவில் மினி வான் – லொறி மோதி கொடூர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது – பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மினிவானும், யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிச் சென்ற லொறியுமே நேருக்கு நேர் மோதியதிலேயே...

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்! – மாவை

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசியல் கலாசாரம் முன்னெடுக்கப்படும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முக்கியத்துவம்...

சம்பந்தனை நீக்கும் வரை ஓயமாட்டோம்! – விமல், தினேஸ்

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சம்பந்தனை நீக்கிவிட்டு குமாரவெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தே தீருவோம். அதில் விட்­டுக் ­கொ­டுப்­பிற்கு இட­மில்லை. நாம் விட்­டுக்­கொ­டுக்­கவும்மாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குண­வர்த்­தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தெரி­வித்­தனர். எதிர்க்­கட்சித் தலைவர் விவ­காரம் தொடர்பில் சபா­நா­ய­கரை சந்­தித்து பேச்­சு­ நடத்­தி­யமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே தினேஷ் குணவர்த்தனவும் விமல்...

ஐ.நா அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நகர்வு! – சம்பந்தன் அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும்...

 நல்லூர் ஆலய சூழலில் மதுபானம் அருந்திய பெண் உட்பட இருவர் கைது

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் இருந்து மதுபானம் அருந்திய பெண் மற்றும் முதியவரை, நேற்று முன்தினம் வியாழக்கிழமை (10) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் மற்றும் 60 வயதுடைய முதியவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இருவரும், பொலிஸாரைக் கண்டதும் அதனை...

ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவம் இன்று!

சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 17 தினங்கள் இடம்பெறும் இம் மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா 25 ஆம் திகதி வௌ்ளிக்கிழமையும் தேர்த்திருவிழா 26 ஆம் திகதி சனிக்கிழமையும், சமுத்திரத் தீர்த்திருவிழா 27...

தீயில் எரிந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றிச் சாவு!

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குடும்பப் பிணக்குக் காரணமாக தனக்குத் தானே தீமூட்டி எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மரணமானார். யாழ்ப்பாணம், நாவாந்துறை மணற்திட்டைச் சேர்ந்த இளம்குடும்பப் பெண்ணான யூலியஸ் நிலாறோஸ் (வயது 21) என்பவரே மரணமானவராவார். தினமும் கணவர் குடித்துவிட்டு...
Loading posts...

All posts loaded

No more posts