Ad Widget

திருகோணமலை இரகசியத் தடுப்பு முகாம்- 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது?

திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பாக 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவர்களை புலனாய்வுப் பிரிவினர், குறித்த இரகசிய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு அமைய துணைப் பொலிஸ் அத்தியட்சகர்கள் தலைமையிலான குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 20 கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.

போர் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு நடடிக்கைகளை மேற்கொண்ட கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளே இப்போது கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று குறிப்பிட்டுள்ளது.

நேற்று இந்த இரகசிய முகாம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மூன்று கடற்படை அதிகாரிகள் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இரகசிய கடற்படை முகாம் தொடர்பில் இதுவரையில 74 கடற்படை அதிகாரிகள், உத்தியோகத்தர்களிடம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

Related Posts