- Thursday
- May 7th, 2026
எதிர்வரும் வருடம் 08 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்படும் என புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குறித்த 08 புகையிரதங்களில் 04 புகையிரதங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், டிக்கெட் வழங்குவதை...
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்ன, குற்ற விசாரணைப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 10ஆஆம் திகதி, ராஜித சேனாரத்ன...
ஐக்கியத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும்...
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்னவின் உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் அவர் கைது செய்யப்படவில்லை என குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குற்ற விசாரணைப் பிரிவினரின்...
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா (வயது -41) என...
சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அதேநேரம் அச்சேவைகளை வழங்கும்போது எந்தவிதமான முறைகேடுகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (26) பிற்பகல் மோட்டார்...
‘வெள்ளை வேன்’ விவகாரம் என்பது கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவை சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்ய முயற்சிப்பது ஏற்புடையதல்ல என கூறினார். ஐக்கிய தேசியக்...
சாவகச்சேரி நகரில் வணிக நிலையம் ஒன்று தீயில் விபத்துக்குள்ளாகியது. அங்கிருந்த சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் தீக்கிரையகியுள்ளன. சாவகச்சேரி ஏ9 வீதியில் உள்ள வணிக நிலையத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) இரவு 6.45 மணியளவில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு மின்சார இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கே காரணம் எனத் தெரிவிக்கப்பட்ட போதும்...
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 15ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு தமிழர் தாயகம் எங்கும் உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி, யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 9.35 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது....
யாழ்ப்பாணத்தில் விலைக் கட்டுப்பாட்டு சோதனை அதிகாரிகளுடன் முரண்பட்ட வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஜனாதிபதியினால் அரிசியின் கட்டுப்பாட்டுவிலை அறிவிக்கப்பட்ட பின்னர் நாடுமுழுவதும் உள்ள விலை கட்டுப்பாட்டு சோதனை பிரிவினரால் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு பொலிஸார் மற்றும் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை)...
2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இப் பரீட்சையில் மொத்தமாக 3லட்சத்து 37 ஆயிரத்து 704 மாணவர்கள் வரை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்...
தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி அதாவது நாளை குறித்த பிரிவின் கொழும்பு நன்காம்...
யாழ். – பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன், அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (பதன்கிழமை) மாலை இடம்பெற்றதாக பொலிஸார்...
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி உலக மக்களையே உருக்குளைய வைத்த சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில...
பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க ஐக்கிய தேசிய முன்னணியிடன் இணைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்றுறை கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களிடம் பேசும் போது அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார் என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் பொதுத்...
அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை அராலி மேற்கு – கோட்டைக்காடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 33 நாள்களே நிரம்பிய பசுக்கன்றுக்குட்டி துள்ளித்திருந்து வேலியில் இருந்த இடைவெளியால் அயல் வீட்டு வளவுக்குள் சென்றுள்ளது. அதனைக்...
பண்டிகை காலங்களில் அரிசி, பருப்பு, மிளகாய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை கொள்வனவு செய்யும்போது விழிப்புணர்வுடன் இருக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 நாட்க்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மனித பாவனைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத அரிசி, பருப்பு, மிளகாய் தூள்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு...
நகரத்தை அலங்கரிப்பதில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அரச விருது வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது காலத்தை செலவளித்து சுயமாக முன்வந்து காலத்திற்கு ஏற்ற வகைகளில் மக்கள் விரும்பும் சித்திரங்களை இந்த இளைஞர் யுவதிகள் வரைந்துள்ளதை தாம் காணக்கூடியதாக இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இவர்களை ஊக்குவிப்பது அனைத்து பிரஜைகளினதும்...
தென்மராட்சி இலக்கிய அணி நடாத்திய கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல்-05.45 மணி முதல் யாழ். சாவகச்சேரி சங்கத்தானை தமிழ்க் கோட்டத்தில் இடம்பெற்றது. குறித்த விழாவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ‘அருட்செல்வர்’ எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
