பொதுத் தேர்தலின் பின் பெரும்பான்மையை நிரூபிக்க ஐதேமுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயார் – சுமந்திரன்

பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க ஐக்கிய தேசிய முன்னணியிடன் இணைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்றுறை கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களிடம் பேசும் போது அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார் என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என அவர் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயக்கமிக்க அணுகுமுறையை கடைப்பிடிக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

Related Posts