வழிப்பறிக் கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்கொலை முயற்சி!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் புன்னாலைக்கட்டுவன் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் இன்று அதிகாலை இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்ய முற்பட்ட சந்தேகநபர் நஞ்சருந்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பலாலி விமானப் படைத் தளத்தில் பணியாற்றும் அலுவலகர் ஒருவர் தனது...

சிங்கள மொழி பிறக்க முன்னரே சைவத் தமிழர் இலங்கையில் இருந்தனர் –சி.வி.விக்னேஸ்வரன்

சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரே சைவத் தமிழ் மக்கள் இலங்கையில் இருந்தனர் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே...
Ad Widget

யாழில் விமானப் படையினரிடம் திருட்டு?

பலாலி இராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாகக் கடமையாற்றும் ஒருவரிடமிருந்து பணம் நகைகள் இனம் தெரியாத மர்ம கும்பலால் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் உரெளு அம்மன் கோயிலுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானப்படை அதிகாரி தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான பொலனறுவை செல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கரவண்டியில் இன்று...

ரணிலும் விரைவில் கைது செய்யப்படுவார்?

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை போன்று பிணைமுறி மோசடி தொடர்பாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய ரணில் விக்ரமசிங்கவும் கைது செய்யப்படுவாறென அவர் மேலும் தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சம்பிக்க ரணவக்க...

வடக்கு மாகாணத்தின் முதல் பெண் ஆளுநர் பதவியேற்பு

வடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பிஎஸ்எம் சாள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை நேற்றுமுன்திம் ஒப்புதலை வழங்கியிருந்த்து. இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக அவர் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...

யாழ் பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த யதுர்சனா என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார். மல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை இவர் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து நேற்று மாலையே இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக...

தொலைபேசி பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

ஆபிரிக்கா மற்றும் வேறு சில நாடுகளைச் சேர்ந்த சிலர் premium callback scam என்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இலங்கையில் தொலைபேசிகளை பயன்படுத்துவோரை இலக்காக கொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்படும் தவறிய அழைப்பை (Missed calls) விடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். 10235,646,2532 ,10212,621-001782 இவ்வாறான இலக்கங்களுக்கு பதிலளிக்கும் பொழுது இவர்களது...

தென்பகுதியில் பெரிய வெங்காயத்திற்கு வழங்கும் இலவச காப்புறுதி வடபகுதி சிறிய வெங்காயச் செய்கைக்கு இல்லை!!

யாழ்ப்பாணத்தில் செய்கை பண்னப்படாத பெரிய வெங்காயத்திற்கு இலவச காப்புறுதி உண்டு ஆனால் மாவட்டத்தில் அதிக விவசாயிகளினால் மேற்கொள்ளும் சிறிய வெங்காயச் செய்கைக்கு இன்றுவரை இலவச காப்புறுதி கிடைப்பதில்லை என யாழ்ப்பாண மாவட்ட விவசாய சம்மேளணத் தலைவர் கந்தையா - தியாகலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் கடந்த ஆண்டில் முதன்...

யாழிற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். மஹவயிலிருந்து ஓமந்தை வரையான பகுதி சீரின்மையால், ரயில் போக்குவரத்து மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...

பங்குத்தந்தையை பொலிஸார் தாக்கிய விவகாரம் – மறைமாவட்ட கத்தோலிக்க சமூகம் கண்டனம்

மன்னார் மறைசாட்சியர் இராக்கினி திருத்தலப் பகுதியில் அதன் பரிபாலகரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை. அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதும் அவமதித்து நடத்த எத்தனித்ததையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க சமுகம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மன்னார் மறை மாவட்டப் பொது நிலையினர் பேரவையின் பொதுச் செயலாளர்...

நாடாளுமன்றத்தை கலைக்கும் திகதியை அறிவித்தார் ஜனாதிபதி

2020 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த அவர், பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றம் கூடும் என கூறினார். இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசியத்தில் சாதித்தனர் தெல்லிப்பளை மகாஜனா மங்கையர்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பெண்கள் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரி மற்றும் பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய அணிகள் மோதின ஆட்ட நேரமுடிவில் தெல்லிப்பளை மகாஜனா பெண்கள் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தேசிய சம்பியனாகியது மகாஜானாவின் வெற்றிக்கொலினை தேசிய அணி வீராங்கனை சாணு அவர்கள் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இப்...

நேற்று உறுதியளித்தபடி இன்று நடவடிக்கையில் இறங்கினார் அங்கஜன்!!

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதில் உள்ள பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெற இது வரையிருந்த டோக்கன் சிஸ்டம் இல்லாதொழிக்கப்பட்டு , மருத்துவ சான்றிதழுக்கான விண்ணப்ப படிவங்களில் திகதியிடப்பட்டு வழங்கப்படவுள்ளன. திகதியிடப்பட்ட திகதியன்று சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையை பெற முடியும். இதற்கான பரீட்சார்த்த...

புலைமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

தரம் ஐந்து புலைமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் நேற்று(புதன்கிழமை) இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் ரோயல் கல்லூரி 180 புள்ளிகளும், டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி 167 புள்ளிகளும், இசிப்பத்தன கல்லூரி 164 புள்ளிகளும், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 154 புள்ளிகளும், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி 175 புள்ளிகளும், ராமநாதன்...

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் கைது!!

அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் வாகனங்களைக் கைவிட்டு தப்பித்துவிட்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ...

கோத்தாபய கொலை முயற்சி – 13 ஆண்டுகளுக்கு மேல் தடுப்பிலிருந்த அரசியல் கைதி விடுவிப்பு

கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்றையதினம் விடுதலை செய்தது. 2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்களிலில் வந்த ஒருவரால் தற்கொலைக்...

யாழ்.பல்கலை. பழைய மாணவர்களுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தை மீளச் செயற்படுத்துவதற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. பழைய மாணவர் சங்கத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு விஞ்ஞான பீட பௌதீகவியல் விரிவுரை மண்டபத்தில் இடம்பெறும் என்று ஒன்றிம் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல்!

வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள PMS சாள்சை நியமிப்பதற்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை கூடிய அமைச்சரவையில் இலங்கை...

மழையுடனான வானிலை மேலும் தொடரும்!

நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்...

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க திட்டம்!

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் இந்த திட்டத்தினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தேச திட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கான தகைமைகளை பூர்த்தி செய்தும் அது கிடைக்காத...
Loading posts...

All posts loaded

No more posts