- Thursday
- May 7th, 2026
புலிகள் தோற்கடிக்கப்பட்டமை நல்லதே. அதற்கு சர்வதேசமும் இந்தியாவும் உதவியன ” என தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு – இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது கொள்கை – இலக்கை அடைய எதிர்காலத்தில் என்ன...
நாடுமுழுவதும் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் தலா 5 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டங்களை ஜனவரி மாதத்துக்கு ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் பிரதேச செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். நேற்று அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்...
சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களை பெறுவதற்கு யாழ்.மாவட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவட்டத்தில் உள்ளோர் சாரதி அனுமதி பத்திரம்...
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாகன சாரதி விண்ணப்பதார்களுக்கான வைத்திய பரிசோதனையில் 55.35 சதவீதமானோர் தேர்ச்சி பெற தவறியுள்ளனர். இதற்கு காரணம் கண் பார்வை குறைபாடு என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த வைத்திய பரிசோதனையின் எண்ணிக்கை 872,769...
வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷ மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா, அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகியது. கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா கட்சிக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேருந்து மோதி முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவத்தையடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்து ஏற்பட்ட பேருந்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது....
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒருமித்து, ஒற்றுமையாக எவ்வாறு எதிர்கொள்வது என நேற்று (17) இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிளவுபடாமல் தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி, ஒன்றாக கூடி எதிர்வரும் தேர்தலில் தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது தனது கருத்து எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். ஒரு...
இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்தியாவில் நிறைவேற்றும் சட்டம் எப்படி இருக்க வேண்டும்...
யாழ் போதனாவைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட தனது குழந்தையை வைத்திருந்த ஒரு தந்தை தனது குழந்தையின் நோய் குணமடைந்ததை அடுத்து தனது நேர்த்திக்கடனை வைத்தியசாலையில் நிறைவேற்றியுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்... யாழில் இருப்பவர்கள் அரச வைத்திய சாலை விடயத்தில் ஒன்றை முழுமையாக நம்புங்கள். வைத்திய வசதிகள் அடிப்படையிலும், வைத்தியர் தாதியரது தகமையடிப்படையிலும் சிறந்தது யாழ்....
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நத்தார் பண்டிகைக் காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு இதன்போது தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்படும் இரண்டாம் நிலை முன்னெச்சரிக்கை இதுவென...
நாட்டின் மூன்று மாகாணங்களுக்கு டெங்கு நோய் குறித்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு தடுப்புப் பிரிவினால் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வட மாகாணம் ஆகியவற்றுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாகவே இவ்வாறு...
சமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை என்றாலும் எமக்கு அதிகார பகிர்வு வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் தத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிகார...
வடகிழக்கு பருவமழை காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அதிக மழைவீழ்ச்சி பதிவாகவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறித்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பகுதிகள் 100 – 150 மில்லிமீற்றல்...
வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நாளை புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்ச மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத...
கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டமையால் பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவிக்கையில், இடைக்கால அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய வரி திருத்தங்கள் காரணமாக ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் குறைத்து கொள்வதற்கு எமது சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்....
யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது. மரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும். இதனைவிட அவர்களை மீள கொண்டுவர முடியாது என்று ஜனாதிபதி...
காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குட்பட்ட தாய்மார் கழகத்தில் அங்கத்துவம் வகிக்கும் தாய்மார்களுக்கிடையே குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக நடத்தப்பட்ட பரீட்சையில் 90 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்த 18 தாய்மார்கள் கௌரவிக்கப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சைவ மகா சபையில், காரைநகரின் நீர்வளத்தைப் பாதுகாப்பது தொடர்பாக இடம்பெற்ற கருத்தரங்கின்போது இவ்வாறு தாய்மார்கள் கௌரவிக்கப்பட்டனர். சுகாதார...
மணலை பாதையில் எடுத்துச் செல்வதற்கான வாகன அனுமதி பத்திர முறை மாத்திரமே நீக்கப்பட்டுள்ளது. மாறாக மணல் அகழ்வதற்கோ அல்லது சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கோ அனுமதிபத்திர முறைமை நீக்கப்படவில்லை. இவ்விடயத்தில் பழைய முறையிலான சட்ட நடவடிக்கைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படும் என்று துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
அதிகாரப்பகிர்வு என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகள் செயற்படுத்த முடியாத திட்டங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படி கொடுப்பது எனவும் கேள்வியெழுப்பினார். கொழும்பில் நேற்று ஊடக பிரதானிகளுடன் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், அப்படி கொடுப்பதாக கூறி...
Loading posts...
All posts loaded
No more posts
