Ad Widget

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு தந்தை செய்த முன்மாதிரியான செயற்பாடு!!!

யாழ் போதனாவைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட தனது குழந்தையை வைத்திருந்த ஒரு தந்தை தனது குழந்தையின் நோய் குணமடைந்ததை அடுத்து தனது நேர்த்திக்கடனை வைத்தியசாலையில் நிறைவேற்றியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்…

யாழில் இருப்பவர்கள் அரச வைத்திய சாலை விடயத்தில் ஒன்றை முழுமையாக நம்புங்கள். வைத்திய வசதிகள் அடிப்படையிலும், வைத்தியர் தாதியரது தகமையடிப்படையிலும் சிறந்தது யாழ். போதனா வைத்தியசாலையே.

டெங்கினால் மோசமாக பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலைக்கு போய் பின் போதனா வைத்தியசாலையில் ஒருவாரம் எம் ஒரு வயது மகனை வைத்திருந்ததில் உணர்ந்தது இது.

யாருக்காவது பணம் அதிகமாக இருந்து இதர சொகுசுகளுடன் வைத்தியம் பார்க்க விரும்பினால் மட்டும் அதுவும் நோயினுடைய தாக்கம் குறைவாக இருந்தால் மட்டும் தனியார் வைத்தியசாலைகளை நாடுங்கள்.

என்ன, போதனா வைத்தியசாலையின் சாபக்கேடு கழிவறைகளே. என்னதான் சுத்தப்படுத்த ஊழியர்களை அமர்த்தினாலும் பாவிக்கும் நம்மவர்களே இதன் கேவலத்துக்கு காரணம்.

நிறைவில் எங்கள் திருப்தியை காட்டும் வகையில் குழந்தைகள் வார்டு ஒன்றுக்கு முழுமையாக ஜன்னல் திரைச்சீலை போட்டுக்கொடுத்தோம். வைத்தியசாலைக்கு ஏதாவது ஒன்று செய்கிறோம் என நேந்த நேத்திக்கடனையும் நிறைவேற்றினோம்.

Related Posts