கோதுமை மாவின் இறக்குமதி வரி 8 ரூபாவாகக் குறைப்பு

கோதுமை மா ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 8 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்றுமுன்தினம் (டிசெ.14) சனிக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. கோதுமை மாவின் இறக்குமதி வரி 36 ரூபாவாக காணப்பட்டது. அந்த வரி முழுமையாக நீக்கப்பட்டு 8 ரூபா புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...

பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் பின்பற்றவேண்டிய 12 விதிமுறைகள்!!

வடக்கு மாகாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தும் பின்பற்றவேண்டிய 12 விதிமுறைகள் தொடர்பில் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பணித்துள்ளது. சாரதி, நடத்துனர் சீருடை அணிதல் மற்றும் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்கல், பயணிகளுக்கு மீதிப் பணம் வழங்கல் உள்ளிட்டவை அவற்றில் அடங்குகின்றன. 2020 ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த விதிமுறைகள்...
Ad Widget

வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாளை(செவ்வாய்கிழமை) முதல் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை ஓரளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் – கருணா

தமிழர்களின் நலன் கருதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தான் தயாராகவே உள்ளதாக கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி...

ஒரு ரூபாய் செலவின்றி ஒரு கிலோ மீற்றா் வீதியை செப்பனி்ட்டு கிளிநொச்சி இளைஞா்கள் சாதனை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கிறவல் கொண்டு செல்லும் டிப்பா் வாகனங்களால் சேதமாக்கப்பட்ட வீதியை இளைஞா்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து டிப்பா் வாகனங்களாலேயே புனரமைப்பு செய்துள்ளனா். கிளிநொச்சி - அழகாபுாி பகுதியின் ஊடாக செல்லும் பழைய கண்டி வீதியில் உள்ள கொக்காவில் சந்தியை அண்மித்த பகுதியில் தற்போது கிரவல் ஏற்ற அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியிடங்களிற்கு ஏற்றிச் செல்லப்படுகின்றது....

யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக 857 பேரே இதுவரை பயணம்!!

யாழ்ப்பாணம் விமான நிலையம் செயற்படத் தொடங்கி ஒருமாத காலப்பகுதியில் 857 பேர் அதனூடாகப் பயனம் செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு 472 பேர் பயணித்துள்ளதுடன் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் 385 பேர் வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் விமான நிலையம் ஒக்டோபர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் நவம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் பயணிகள் விமான...

வண்ணமயமான நகரங்கள் – யாழ்ப்பாணத்திலும் சுவர் ஓவியங்கள் வரையப்படுகிறது!!

நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் வண்ணமயமான நகரம் திட்டம் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாமல் ராஜபக்சவின் தலைமையில் இயங்கும் இளைஞர்கள் குழுவால் இந்ததத் திட்டம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நுண்கலைத் துறை மாணவர்கள், உள்பட சித்திரத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்யோர்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிலங்கையில் படை வீரர்களை கௌரப்படுத்தும் சுவர் ஓவியங்கள் பல வரையப்படுகின்றன. இந்தத்...

சிறப்புத் தேவையுடைய சிறார்களின் வளர்ச்சிக்கு யாழ். பல்கலை. மாணவர்கள் வாகனங்களைச் சுத்திகரித்து நிதி சேகரிப்பு!!

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்குவதற்கு நிதி திரட்டும் நோக்குடன் , யாழ்.பல்கலை கழக முகாமைத்துவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் CAR WASH நிகழ்வு நடைபெற்றது. யாழ்.பல்கலை கழக முன்றலில் நேற்று காலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு பல்கலைகழக சமூகம் , மாணவர்கள் , பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளை நல்கி இருந்தனர்.

யாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்

மானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.' மானிப்பாய் மற்றும் கட்டுடையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்ற...

விக்கியின் கூட்டோடு இணைய தயார் – சிறிகாந்தா

முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து பிரிந்த உறுப்பினர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி...

வல்லரசுகளின் பூகோளப் போட்டிக்கு மத்தியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படும் வாய்ப்பு – கஜேந்திரன்

இலங்கை தீவை மையப்படுத்தி வல்லரசுகளுக்கு இடையே நடக்கின்ற பூகோளப் போட்டியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமைகள் இருக்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனை தாங்கள் கடந்த பல வருடங்களாகச் சொல்லிவந்த போதும், தமிழ் தரப்புக்களே இது நடைமுறைச் சாத்தியமற்றது என தங்களை கேலி செய்ததாகவும்...

விக்னேஸ்வரனுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நவ சிங்ஹலே தேசிய இயக்கத்தின் தலைவர் டான் பிரசாத்தினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சி.வி விக்னேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து ஒன்று, இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

இது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்

விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின்...

இலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. 2019 ஆம் ஆண்டு புதிய குடியுரிமை திருத்த...

பொலிஸார் இணைந்து யாழில் 3 வாரங்களுக்கு அதிரடி நடவடிக்கை!

யாழில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் டெங்கு தொடர்பான அவசர கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் முப்படையினர் மற்றும் மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அடுத்த மூன்று வாரங்கள் டெங்கை ஒழிப்பதற்கான அவசர காலமாக...

இன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி!

சூரிய சக்தியால் இயங்கும் முதலாவது முச்சக்கரவண்டி இன்று (13) அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. இந்த முச்சக்கர வண்டியை சுற்றுச்சூழல் விரும்பி என அறிமுகப்படுத்த உள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அறிமுக விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. கொரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் இந்த...

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லையில் இடையிடையே மழை பொழியும்!!!

நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மேல்,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானம்!

ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை...

மின் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்!

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் மோதலில் நிறைவடைந்துள்ளது. மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

வீட்டில் கொசு,பூச்சி,பல்லி, எலிகளை கூண்டோடு ஒழிக்க இந்த முறையை செய்ங்க!

கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம். கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைத்து, அதை கரப்பான்...
Loading posts...

All posts loaded

No more posts