Ad Widget

வீட்டில் கொசு,பூச்சி,பல்லி, எலிகளை கூண்டோடு ஒழிக்க இந்த முறையை செய்ங்க!

கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.

கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைத்து, அதை கரப்பான் பூச்சி சாப்பிட்டால், இறந்துவிடும்.

பிரியாணி இலையை பொடி செய்து, கரப்பான் பூச்சி அதிகம் சுற்றும் இடத்தில் தூவிவிட்டால், அதன் நறுமணத்தால் கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.

கரப்பான் பூச்சி வரும் இடத்தில் கிராம்பை வைத்தால், அதன் நறுமணத்திற்கு கரப்பான் பூச்சி வராது. முக்கியமாக அவ்வப்போது கிராம்பை மாற்ற வேண்டும்.

எலி

எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.


சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

கொசுக்கள்

கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.