வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவ சிங்ஹலே தேசிய இயக்கத்தின் தலைவர் டான் பிரசாத்தினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சி.வி விக்னேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து ஒன்று, இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையை ஒரு பௌத்த நாடு என வரையறுக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும், மகா வம்சம் உள்ளிட்ட இதிகாசங்கள் புனைகதைகளை மக்களுக்கு கூறுவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்ததாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை சிங்கள மக்களின் பூர்வீக பூமி அல்ல எனவும், தமிழ் பௌத்தர்களே இலங்கையின் பூர்வீக குடிகள் எனவும் அவர் தெரிவித்திருந்ததாக குறித்த முறைப்பாட்டில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.