Ad Widget

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்திற்க்கான வைத்திய பரிசோதனையில் 55.35 வீதமானோர் சித்தியடையவில்லை!!

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாகன சாரதி விண்ணப்பதார்களுக்கான வைத்திய பரிசோதனையில் 55.35 சதவீதமானோர் தேர்ச்சி பெற தவறியுள்ளனர்.

இதற்கு காரணம் கண் பார்வை குறைபாடு என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த வைத்திய பரிசோதனையின் எண்ணிக்கை 872,769 ஆகும்.

மருத்துவ பரிசோதனையில் தற்காலிகமாக தேர்ச்சி பெறாத வாகன சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 101,596 ஆகும்.

ஊனம், வலிப்பு, உளவியல் நோய் போன்ற காரணங்களினால் தேர்ச்சி பெற தவறிய விண்ணப்பதார்களின் எண்ணிக்கை 13 சதவீதமாகும்.

2019 ஆம் ஆண்டு அனுமதிப்பதிரத்திற்காக விண்ணப்பித்தவர்களில் 2.49 சதவீதமானோர் இருதய நோயினாலும் 10.5 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரத்த அழுத்தத்தினாலும் 25.35 சதவீதமானோர் நீரிழிவு நோயினாலும், ஏனைய நோய்களின் காரணமாக 6.78 சதவீதமானவர்களும் தற்காலிக வைத்திய பரிசோதனையில் தேர்ச்சி பெற தவறியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் 11.40 சதவீதமானோர் இவ்வாறு தேர்ச்சி பெற தவறினர்.

இவ் வருடத்தில் 11.69 சதவீதமானோர் தேர்ச்சி பெற தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts