Ad Widget

சீனாவிலிருந்து 8 புதிய ரயில்கள்; புகையிரதசேவை இலத்திரனியல் மயமாகும்

எதிர்வரும் வருடம் 08 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்படும் என  புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குறித்த 08 புகையிரதங்களில் 04 புகையிரதங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், டிக்கெட் வழங்குவதை விரிவுபடுத்துவதற்காக புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும்,  புகையிரத சேவை நேரசூசியை காட்சிப்படுத்தும் வகையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் இலத்திரனியல் திரைகள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

புகையிரதங்களில் பிச்சை எடுத்தல், வர்த்தகம் செய்தல் நிறுத்தப்படும் என்பதோடு, அனைத்து சிற்றுண்டிச்சாலைகளும் விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் வகையிலான தேசிய உணவுகளைக் கொண்ட உணவகங்களாக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

புகையிரத தாமதங்களை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாகவும் புகையிரதங்கள் தாமதமடைவது குறித்து உடனடியாக அறிந்துகொள்ள புகையிரத திணைக்களத்தில் இலத்திரனியல்  நேர அட்டவணை காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts