- Tuesday
- May 12th, 2026
இலங்கையின் புதிய ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞைகளை வரவேற்பதாக தெரிவித்திருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் அனைத்தும் வாய்வார்த்தைகள் என்பதைத் தாண்டி செயல்களாக மாறுவதைக் காணவே பிரிட்டன் விரும்புகிறது என்று கூறியிருக்கிறார். காமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்திருக்கும் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவை செவ்வாய்க்கிழமை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று உபசரித்துப்பேசிய...
அர்ஜெண்டினாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவத்தில், பிரான்சின் முன்னாள் முன்னணி விளையாட்டு நட்சத்திரங்கள் மூன்று பேர் உட்பட பிரஞ்சு பிரஜைகள் எட்டு பேர் உயிரிழந்திருப்பது தன்னை தாளாத் துயரத்தில் தள்ளியிருப்பதாக பிரஞ்சு அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். தொலைதூரத்து இடங்களில் பிரபலங்கள் கஷ்டப்பட்டு உணவு...
உலகளவில் இசைத்துறையில் நோபல் பரிசு என்று கருதப்படும் போலார் மியூசிக் விருது இந்த ஆண்டு இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் பிரபல தாள வாத்தியக் கலைஞரான டேம் எவ்லின் க்ளெனி மற்றும் அமெரிக்காவின் நாட்டுப்புற இசைக் கலைஞர் எமிலோ ஹாரிஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். [caption id="attachment_41671" align="aligncenter" width="2400"] எவ்லின் க்ளெனி[/caption]...
அயர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியை இந்திய அணி வென்றதன் மூலம் இந்திய அணி கேப்டன் டோணி 3 சாதனைகள் படைத்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா தான் விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் இந்தியா...
விக்ரம் படம் என்றாலே வெளிவருவதற்கு நீண்டகாலம் ஆகும் என்ற நிலை தற்போது தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஐ’ படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை தகர்த்தெறிய தற்போது விக்ரம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில்...
‘வெள்ளக்கார துரை’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ படத்திலும், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா’ படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் வெளியாக உள்ள இப்படங்களை அடுத்து புதிதாக ஒரு படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறாராம். புதிய படத்தை...
கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள் அவர்கள் நம்பிக்கையுடன் நாடு திரும்பியபோதிலும், விமான நிலையத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம்,...
தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை, அனைத்து நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலானதாகும் என்றும் இலங்கை அதன் அபிவிருத்திச் செயற்பாடுகளில் எல்லா நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையுடன் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் செயன்முறையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று பிரித்தானியாவின் பாதுகாப்புத் தலைமையகத்தில் ஐக்கிய...
தற்காலத்தில் எமது உணவுகளில் இரசாயணப் பயன்பாடு அதிகரித்தே வருகின்றது. விவசாயத்தில் விஞ்ஞான முறை கலந்து அனைவரும் நஞ்சினை உண்டு கொண்டிருகின்றோம். அந்தளவிற்கு இந்த விவசாயத்தில் இரசாயணத்தைக் கலந்திருக்கின்றோம். இந்தச் சவால்களை ஏற்றுக் கொண்டு எதிர்நீச்சல் போட வேண்டியவர்களாக இருக்கின்றோம். என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். நேற்று (09) தனது...
யாழ்ப்பாணம், மயிலிட்டி படைமுகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதவிவெல, ரந்தனியகலவைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது - 25) என்ற சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். நேற்றிரவு படைமுகாமுக்குள் உள்ள மாமரம் ஒன்றில் இவர் தூக்கில் தொங்கிய நிலையிலல், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் என்றும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சுயநிர்ணய உரிமையை இழந்து நிற்கின்ற தமிழினத்தின் தலைவிதியை மாற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உன்னதமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை சைவ மகா சபை கோரிக்கை விடுத்திருக்கின்றது. இந்தியப் பிரதமரை வரவேற்கும் கடிதம் கடந்த 6 ஆம் திகதி சைவ மகா சபையின் பிரதிநிதிகளால் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த கார், நாவுல நாலந்தவுக்கு அண்மையில் தீப்பற்றி கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காரை செலுத்தி சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரும் எவ்விதமான காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன், இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். பிணை வழங்குமாறு கடந்த 6ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அக்குழுவின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்று சு.க.வின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எம்.ஆரியசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்த்திருத்தும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா...
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அடையாளக் கம்பத்துடன் மோதுண்டு மயங்கிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கு அண்மையாக இடம்பெற்ற இந்த விபத்தில் அளவெட்டியைச் சேர்ந்த எஸ்.தர்சன் (வயது 19) என்ற இளைஞரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவராவார். உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் நீண்டநேரமாக மயக்கம்...
இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஒளடதங்கள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையும் அதன் அடிப்படையில் ஒரு சுதந்திரமான அதிகாரசபை அமைக்கப்படுவதையும் தாம் மனப்பூர்வமாக வரவேற்பதுடன் இது சீரான முறையில் அமூல்படுத்தப்படுவதன் மூலம் இலவச மருத்துவ சேவையில் வரப்பிரசாதங்கள் முழுமையாகக் கிடைக்க வழிவகுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
வடமாகாணத்திலுள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு விடுதிகள் அமைப்பதற்காக இந்த வருடம் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன் திங்கட்கிழமை (09) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் வருடாந்தம் கால்நடை வைத்தியர்களுக்குரிய விடுதிகள் அமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் 4 விடுதிகளும் கிளிநொச்சியில் 2...
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைக்கவசம்(ஹெல்மட்) அணியும் சட்டத்தை உடன் அமுல்படுத்தவேண்டாம் என்றும் அச்சட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார். இந்த சட்டம் இம்மாதம் 21ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்....
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இந்தியப் பெண் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டமையை இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் கண்டித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மிக்பெரிய நகரமான சிட்னியில் பூங்கா ஒன்றில் பிரபா அருண் குமார் என்ற பெண் சனிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் ஆஸ்திரேலியப் பொலிஸார் யாரையும் இதுவரைக் கைதுசெய்யவில்லை. ஆனால், இனத்துவேஷத்துடன் சம்பந்தப்பட்ட தாக்குதலாக இதனைக் கருதுவதற்கான...
Loading posts...
All posts loaded
No more posts
