தாயரான ஜெயக்குமாரியிடம் விபூசிகாவை ஒப்படைக்குமாறு நீதிமன்றில் மனு!

மகாதேவா ஆச்சிரமத்தின் சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்கும் விபூசிகாவை அவரின் தாயான ஜெயக்குமாரியிடம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மனுவை தாயாரான ஜெயக்குமாரியின் சார்பில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் 7 சட்டத்தரணிகள் தாக்கல் செய்யவுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இணைவதற்கு நடவடிக்கை எடுத்தார் எனக் கூறப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட கோபிக்கு புகலிடம்...

கோட்டாபய விரைவில் கைதாவார்?

காலி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் தேசிய நிறைவேற்று அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதில் பெரும் மோசடிகள் இடம்பெற்றன எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 'அவன்ற் கார்டே' நிறுவனத்தின் இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும்வரை, கோட்டாபய...
Ad Widget

மோடியின் வருகை; வலி வடக்கில் பற்றைகள் துப்புரவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண வருகையிட்டு வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் - கீரிமலை வீதியின் இரு மருங்கிலும் உள்ள பற்றைகள் வெட்டி அகற்றப்படுவதுடன், கீரிமலையில் இருந்து சேந்தான்குளம் செல்லும் வீதியில் சில பகுதி கற்கள் போடப்பட்டு துப்பரவு செய்யப்படுகின்றன. இந்தியப் பிரதமர் 14ஆம் திகதி கீரிமலைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின்...

இலங்கைத் தேர்தல் நடைமுறையில் மாற்றம் வருகிறது

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் விருப்ப வாக்கு நடைமுறை காரணமாக, தேர்தல்களில் பல்வேறு சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, கட்சிகளுக்கு உள்ளேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன அதன் காரணமாக தேர்தல் நடைமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனும் பொதுவான கருத்து...

பொலன்னறுவையில் நில அதிர்வுகள் பதிவு!

பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (11) இரவு சுமார் 8.20 அளவில் இவ்வாறு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது

மகாராணியை சந்தித்தார் மைத்திரிபால!

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பாரியாரும் இச்சந்திப்பின் போது கலந்து கொண்டுள்ளார். மேலும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவையும் ஜனாதிபதி சந்தித்தார். இதன்போது வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மாகாண...

யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்த நாம் சூழலியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்து விடக் கூடாது – பொ.ஐங்கரநேசன்

கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக, இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள். யுத்த அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாகவும் இடம் பெயர வேண்டிய அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு...

சுகாதார உதவியாளர்களுக்கு 3 மாதங்களாக சம்பளமில்லை, ஆளுநரிடம் முறைப்பாடு

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றும் 10 பேருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்காரவிடம் இன்று (11) தெரிவித்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நியமனம் பெற்ற இவர்கள், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றனர்....

இம்மாத இறுதிக்குள் 1,000 ஏக்கரில் மீள்குடியேற்றம்

யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் அக்காணிகளில் பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் இன்று தெரிவித்தார். மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் புதன்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போதே அவர்...

சங்கக்கார உலக சாதனை

ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளில், தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு சதங்களை பெற்று இலங்கை வீரர் குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார். ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக ஹோபார்டில் நடைபெற்றுவரும் போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். உலகக்கிண்ண போட்டிகளில், இங்கிலாந்து, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இவர் ஏற்கெனவே மூன்று சதங்களை பெற்றுள்ளார். இதேபோல் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக...

அம்மாவின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி – விபூசிகா

எனது அம்மா ஜெயக்குமாரி பாலேந்திரனை விடுதலை செய்வதற்கு போராடிய சட்டத்தரணிகள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜெயக்குமாரியின் மகள் விபூசிகா தெரிவித்துள்ளார்.

இ.போ.சபையின் வடபிராந்திய ஊழியர்கள் ஒருமணிநேர பணிப்பகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலையின் ஊழியர்கள் இன்று ஒருமணிநேர பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இன்று காலை 10 மணியிலிருந்து 11 மணிவரையே இ.போ.சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பில் தெரிய வருவது, யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுமலசலகூடத்தில் இருந்து மலக்கழிவுகள் 15 நாட்களாக அகற்றப்படாமையினால் பொதுமலசலகூடம் பூட்டப்பட்டுள்ளதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.இதனால் அதிகாலையில்...

வலி.வடக்கு மீள்குடியேற்றம் ; இன்று இறுதி தீர்வு

வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட வலி.வடக்கு பிரதேசத்தில் ஆரம்பக் கட்டமாக மக்களுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி விடுதலை செய்வது தொடர்பில் அண்மையில் ஆராயப்பட்டதுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசே குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குறித்த குழுவின் நடவடிக்கைகளின்...

நான் அநாதையாப் போயிட்டன், மகனை தந்து விடுங்கள் – ஜெயக்குமாரி

"என்ர காணாமற் போன பிள்ளை வரவேணும். அவனை எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்கோ'' பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி கண்ணீர் மல்க நீதி மன்றத்துக்கு முன்பாக இவ்வாறு கோரினார். ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி நிபந்தனைப் பிணையுடன் நேற்று விடுவிக்கப்பட்டார். அவர் நீதிமன்ற வாயிலினூடாக வெளியே வந்ததும், வெளியில் நின்றிருந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அவரை...

நோ பயர் ஷோன் ஆவணப் படத்தை இலங்கையில் ஒளிபரப்ப அனுமதியுங்கள்!!

இலங்கை இறுதிப் போரில் இடம்பெற்ற போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய 'நோ பயர் ஷோன்' ஆவணப் படத்தை இலங்கையில் ஒளிபரப்பு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால அனுமதிக்க வேண்டும் என அதன் தயாரிப்பாளர் கெலும் மக்ரே கேட்டுள்ளார். சிங்கள மொழியில் பிரயாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம் பிரிட்டன் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது....

ஆசிரிய இடமாற்றக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன

வருடாந்த இடமாற்றம் கோரிய ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 3.50 மணியளவில் வடமாகாண கல்வித் திணைக்களத்தில் வைத்து ஆசிரியர்களிடம் கைளிக்கப்பட்டதோடு, மாகாண கல்வித் திணைக்களத்திலும் காட்சிப்படுத்தப்பட்டது. வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 54 ஆசிரியர்களுக்கும், மன்னார் கல்வி வலயத்தில் 11 ஆசிரியர்களுக்கும், மடு கல்வி வலயத்தில் 20 ஆசிரியர்களுக்கும், வவுனியா தெற்கு கல்வி...

யாழ் வைத்தியசாலை கழிவகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு

யாழ். போதனா வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் பணியை தனியாருக்கு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். கடந்த காலங்களில் வைத்தியசாலை கழிவுகளை யாழ். மாநகர சபையே அகற்றி வந்தது. மாநகர சபை, ஒழுங்காக கழிவுகளை அகற்றாதமையால் அந்தப் பணியை தனியாரிடம் வழங்கவுள்ளோம். கடந்த சில நாட்களாக அகற்றப்படாமல் இருந்த...

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் பெண் உயிரிழப்பு

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிகண்டி, கொற்றாவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அன்பழகன் அமுதா (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த பெண், எரிகாயங்களுடன் கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்....

சிறைக் கைதி மரணம்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியொருவர், திங்கட்கிழமை (09) இரவு, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, பாரதிபுரம், 145ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான தேவதாஸ் குணசீலன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர்,...

மாத்திரை சிக்கியதில் பாலகன் பலி

தொண்டையில் மாத்திரையொன்று சிக்கியதில் 3 வயது சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றது. சம்பவத்தில், கி.அருண் என்கின்ற சிறுவனே உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அச்சிறுவனுக்கு, அவனது தாயார் மாத்திரையொன்றைக் கொடுத்த போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சிறுவனை அவனது பெற்றோர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு அழைத்துச்...
Loading posts...

All posts loaded

No more posts