Ad Widget

ஆசிரிய இடமாற்றக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன

வருடாந்த இடமாற்றம் கோரிய ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 3.50 மணியளவில் வடமாகாண கல்வித் திணைக்களத்தில் வைத்து ஆசிரியர்களிடம் கைளிக்கப்பட்டதோடு, மாகாண கல்வித் திணைக்களத்திலும் காட்சிப்படுத்தப்பட்டது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 54 ஆசிரியர்களுக்கும், மன்னார் கல்வி வலயத்தில் 11 ஆசிரியர்களுக்கும், மடு கல்வி வலயத்தில் 20 ஆசிரியர்களுக்கும், வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 42 ஆசிரியர்களுக்கும், தீவக கல்வி வலயத்தில் 54 ஆசிரியர்களுக்கும். முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 35 ஆசிரியர்களுக்கும் கிளிநொச்சி கல்வி வலயத்தில் 82 ஆசிரியர்களுக்கும் என 298 ஆசிரியர்களுக்கு இந்த இடமாற்ற கடிதங்கள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு கல்வி வலயம், வடமராட்சி கிழக்கு கல்வி வலயம், கிளிநொச்சி கல்வி வலயம் ஆகியவற்றின் சில ஆசிரியர்களின் பெயர்கள் தவறவிடப்பட்டுள்ளதாக அந்தந்த ஆசிரிய பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (11) 2 மணிக்கும் தமது விண்ணப்பபடிவங்களை பார்வையிட்டு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவுள்ளதாகவும், நிராகரிக்கப்படுவதற்காக காரணம் இன்றி இருப்பின் அவர்களும் இடமாற்றம் பெறும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

இடமாற்றக் கடிதங்கள் தங்களுக்கு வழங்கப்படாமையை கண்டித்து ஆசிரியர்கள், கடந்த திங்கட்கிழமை (09) போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts