Ad Widget

வலி.வடக்கு மீள்குடியேற்றம் ; இன்று இறுதி தீர்வு

வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட வலி.வடக்கு பிரதேசத்தில் ஆரம்பக் கட்டமாக மக்களுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி விடுதலை செய்வது தொடர்பில் அண்மையில் ஆராயப்பட்டதுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசே குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

குறித்த குழுவின் நடவடிக்கைகளின் படி மூன்று வாரங்களில் மீள்குடியேற்றம் சாத்தியமாகும் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் வளலாயில் மாதிரிக் கிராமம் அமைக்கும் முயற்சியும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில் இன்று இறுதி முடிவு எட்டப்படுவதற்கான விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் அரச அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, மோடியின் வருகைக்கு முன்னர் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் வளலாயிலேயே முதல் கட்ட மீள்குடியேற்றம் அமையும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts