Ad Widget

பிரஞ்சு விளையாட்டு பிரபலங்கள் அர்ஜெண்டினா விபத்தில் பலி

அர்ஜெண்டினாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவத்தில், பிரான்சின் முன்னாள் முன்னணி விளையாட்டு நட்சத்திரங்கள் மூன்று பேர் உட்பட பிரஞ்சு பிரஜைகள் எட்டு பேர் உயிரிழந்திருப்பது தன்னை தாளாத் துயரத்தில் தள்ளியிருப்பதாக பிரஞ்சு அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார்.

helicoptor_crash_afp

விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

தொலைதூரத்து இடங்களில் பிரபலங்கள் கஷ்டப்பட்டு உணவு உறைவிடமும் தேடும் விதமான ‘ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நீச்சலில் ஒலிம்பிக் தங்கம் வென்றவரான கமீல் முஃப்பத், ஒலிம்பிக்கில் பங்கேற்ற குத்துச்சண்டை வீரர் அலெக்ஸிஸ், பல வெற்றிகளைக் கண்ட பாய்மரப்படகு வீராங்கனை ஃப்ளொரான்ஸ் அர்தோட் ஆகிய விளையாட்டு நட்சத்திரங்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் பெயர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஹெலிகாப்டரைச் செலுத்திய அர்ஜெண்டினப் பிரஜைகள் இருவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Posts