Ad Widget

கால்நடை வைத்தியர்களுக்கு விடுதி

வடமாகாணத்திலுள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு விடுதிகள் அமைப்பதற்காக இந்த வருடம் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன் திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாணத்தில் வருடாந்தம் கால்நடை வைத்தியர்களுக்குரிய விடுதிகள் அமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் 4 விடுதிகளும் கிளிநொச்சியில் 2 விடுதிகளும் முல்லைத்தீவில் 3 விடுதிகளும் வவுனியாவில் 3 விடுதிகளும் மன்னாரில் 2 விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வருடம் பச்சிலைப்பள்ளி, வவுனியா தெற்கு, மடு மற்றும் கிளிநொச்சி அறிவியல் நகர் ஆகிய இடங்களில் தலா ஒரு விடுதி அமைக்கவுள்ளோம்.

வட மாகாணத்தில் 43 கால்நடை வைத்தியதிகாரிகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விடுதிகள் அமைக்கப்பட வேண்டியது மிக அவசியம் என அவர் தெரிவித்தார்.

Related Posts