Ad Widget

யாழ்.மாவட்டத்தில் ஆணும் பெண்ணும் சமம் – அரச அதிபர்

யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 6 இலட்சத்து 15 ஆயிரமாக உள்ள நிலையில் பெண்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சமாக உள்ளது.

எனவே யாழ். மாவட்டத்தைப்பொறுத்தவரையில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாகவே உள்ளனர்.எனவே இங்கு ஆண்களது எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் சமனாகவே உள்ளது.

இதேவேளை, கடந்த கால போரினாலும் இயற்கையினாலும் கணவனை இழந்தவர்கள் என 28 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இவர்களில் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக இருப்பவர்களுக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் ஊடாக இல்லம் அமைக்கப்படவுள்ளதுடன் அவர்களுக்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts