- Friday
- May 15th, 2026
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர்,...
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மாணவிக்கு நீதி கோரியும் கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்று கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரிக்கு முன்பாகவே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மானம் போக்கிய மானிடரை மன்னிக்காதே, தண்டனையை தயங்காமல் வழங்கு...
வவுனியாவில் இடம்பெற்ற ஹர்த்தால் நடவடிக்கையை புகைப்படம் பிடித்த ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் இன்று வியாழக்கிழமை வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இரண்டு மணிநேரத்தின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வித்தியா படுகொலைக்கு நீதி கோரி வவுனியாவில் ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது. இதன்போது திருநாவற்குளம் பகுதியில் உள்ள பிரதான வீதியில் சிலர் ரயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தினர்....
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதன்கிழமை(20) ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை வியாழக்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுப்படுகொலை தொடர்பலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விஷேட விசாரணைகளுக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின், கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்பு குழுவொன்று யாழ். புங்குடுதீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ்...
ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக இன்று வியாழக்கிழமை காலை பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் மக்கள் ஈடுபட்டனர். நீதிமன்றின் முன் ஒன்றுகூடுபவர்களை சுடுவதற்கு உத்தரவு இருக்கிறது எனவே கலைந்து செல்லுங்கள் என பொலிஸார் கூறியதற்கு அமைய அங்கிருந்து சென்றனர். புங்குடுதீவில் கூட்டுவன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கொலைக் குற்றவாளிகளுக்கு கடும்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சீ.பி. ரத்னாயக்க, மஹிந்த யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அவர்களது அமைச்சு பதவிகளை சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு நடைபெறுகின்றது. வவுனியா நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்படும் அதேவேளை பரவலாக பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். நகருக்கு வரும் சில வீதிகளில் ரயர்கள் போட்டு எரியூட்டப்பட்டுள்ளது. வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரப் பகுதியில் அமைதியான முறையில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இதேவேளை, பாடசாலைகள்,...
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பான விபரப்பட்டியல் ஏதும் தம் வசம் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி இல்லத்தில் நேற்று ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் நிறைவில் ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சர்வதேச தரப்பினர் தம் வசமுள்ள பல்வேறு பட்டியல்களை...
யாழ். நகர் மற்றும் நீதிமன்ற சூழலிலும் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் தொடர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இடம்பெற்ற வன்முறையினை அடுத்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் 127 பேர் நேற்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர் என்றும் வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா...
புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு நடந்த கொடூரமான, மிருகத்தனமான சம்பவம் எமது நாட்டில் என் ஞாபகத்துக்கு எட்டிய வரையில் நடந்ததும் இல்லை, நான் கேள்விப்பட்டதும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எத்தனையோ ஆசைக் கனவுகளுடன் தமது பிள்ளைகளை சீராட்டி வளர்த்த...
பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய நேற்று இரவு இவர் யாழ் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை யாழில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இதுவரை 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புங்குடுத்தீவில் பாடசாலை மாணவி...
இறுதிச்சமர் நினைவுதினத்தைமுன்னிட்டுவடமாகாணசபையின் உறுப்பினர் கௌரவஅனந்திசசிதரன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஅவர்களின் விஷேட கவனத்திற்குமுன்வைத்தகோரிக்கைகளின் தமிழ் ஆக்கம் திகதி 18.05.2015 அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதிசெயலகம் காலிமுகத்திடல் கொழும்பு-01 அதிமேதகு ஐயா! 2009 சிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுஉயிர்பிழைத்துவாழும் வடக்குமற்றும் கிழக்குப் பிராந்தியமக்களின் நல்வாழ்வை உயர்த்தக்கோரும் பணிவானவேண்டுகோள். 18 வைகாசி 2009ம் ஆண்டுஎன்றுமுடிவடைந்தயுத்தத்தால் குறிப்பாக வடக்குமாகாணத்தில் ஏறத்தாழ ஒருலட்சத்து நாற்பத்தாறாயிரம்...
புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எதிராக எமது மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது எமது ஜனநாயக உரிமையாகும். நான் கூட என் எண்ணங்களை அறிக்கையாக ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். ஆனால் அமைதியாக நடைபெறும் எமது பேரணிகளையும் கண்டன நிகழ்வுகளையும் சாட்டாக வைத்துப் பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர். யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என முன்னர்...
புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்று வரும் நிலையில். யாழில் நாளை புதன்கிழமை தனியார் பேருந்துகள்அரச பஸ்கள் சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் என்பனவும் இயங்காதெனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாளை புதன்கிழமை மாவட்ட இளைஞர் கழகம் யாழ்.நூலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு மாணவி...
மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றை இடைநிறுத்தியுள்ள வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் உரிய தரப்புகளிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தில் கடற்கரைக்குச் சமீபமாக 25 ஹெக்டெயர் அரச காணியில்...
Loading posts...
All posts loaded
No more posts





