Ad Widget

வன்புணர்வுக்கெதிரான போராட்டம் வன்முறையாக மாற்றம்! யாழில் பதற்றம்!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு இடங்களின் இன்று புங்குடுதீவு மாணவியின் வன்புணர்வுக்கெதிரான கர்த்தாலுடன் கூடிய ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தப்போராட்டங்களில் சில வன்முறைகளாக மாறி வருகின்றது.

பரமேஸ்வரா சந்தியிலும் யாழ் பொது நுாலகத்திற்கு முன்பாகவும் செயலகத்தக்கு முன்பாகவும் கோப்பாய்  ஆசிரியர் கலாசாலைக்கு முன்பாகவும் தொழில்நுட்ப கல்லூரி முன்பாகவும் அமைதியான முறையில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன  . அதேவேளை  நீதிமன்ற கட்டடத்தொகுதி உட்பட பல இடங்களில்

 

11119152_813659678718683_3828335980435597056_oவீதிகளை மறித்து ரயர்கள் எரித்தல் போக்குவரத்துக்களை தடைசெய்தல் நீதிமன்ற கட்டடத்தொகுதி மீதும் கடைகள் மீதும் பொலிஸ் மற்றும் வாகனங்கள் மீதான கல்லெறிகளாகவும் மாறியுள்ளது.இந்த விசமச்செயல்களை போராட்டக்காரர்களிடையே ஊடுருவியுள்ள சில காடையர்கள் மேற்கொள்வதாக போராட்டக்காரர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மது வெறியினால் மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வுக்கு  எதிராக உணர்வு பூர்வமாக வெளிக்காட்டவேண்டிய எதிர்ப்புக்களை சிலர் மதுவெறியிலும் வேறு நோக்கங்கங்களுடனும் திசைதிருப்புவதாகவும் இதனால் பொதுச்சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாகவும் மக்களுக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் அசௌகரியங்கள் விளைவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
ஏற்கனவே குறித்த மாணவி கொலை சம்பவத்தில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் புங்குடுதீவு மக்களுக்கும் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று 12 மணிக்கு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் அவருக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி தமிழ்மாறனையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக புங்கடுதீவு மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.

வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டகுற்றவாளி மற்றும் யாழில் கைதாகிய குற்றவாளிகளையும் நீதிமன்றில் முற்படுத்தாதையடுத்து குற்றவாளிகளை காப்பாற்ற பொலிசார் முற்படுவதாக குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தை நோக்கி கல்லெறித்தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

நீதிமன்றக்கட்டடத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட கல்லெறித்தாக்குதலை அடுத்து பொலிசார் கண்ணீர்புகைக்குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்திருப்பதாகவும் தெரியவருகின்றது. பிந்திக்கிடைத்த தகவலின்படி துப்பாக்கி வேட்டுக்கள் கூட தீர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதவிக்கு இராணுவத்தினரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்

அத்துடன் யாழ். சத்திரச் சந்திப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சமிக்ஜை விளக்குகளை அடித்து சேதமாக்கியதுடன் நகரின் மத்தியில் இருந்த பொலிஸ் அவதானிப்பு நிலையத்தையும் அடித்து நொருக்கியுள்ளார்.

சில ஆர்ப்பாட்டக்கார்களின் கோலங்களையும் நடவடிக்கைகளையும் அவதாCFbxP9uUMAApAjnனிக்கும் போது   உண்மையில் அவர்கள் எதற்கு போராடுகின்றார்கள் வித்தியாவிற்காக வருந்துகின்றார்களா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நிலமை கட்டுமீறி செல்வதை தடுக்க நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதங்கள், கலகம் அடக்கும் உபகரணங்களுடன்  விசேட அதிரடிப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்

பிந்திய இணைப்பு:
யாழ். நகரில் ரயர் எரிக்க முற்பட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டு இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவித்ததன் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 130 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள்கள்  – 36, துவிச்சக்கர வண்டிகள் -27, முச்சக்கர வண்டி – 02 என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் 3 பொலிஸாருக்கும் சட்டத்தரணி ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts