Ad Widget

நாளை பஸ் சேவை அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் பகிஸ்கரிப்பில்

புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்று வரும் நிலையில். யாழில் நாளை புதன்கிழமை தனியார் பேருந்துகள்‬அரச பஸ்கள் சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் என்பனவும் இயங்காதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாளை புதன்கிழமை மாவட்ட இளைஞர் கழகம் யாழ்.நூலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு மாணவி படுகொலையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்தும் அப் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கொலைச்சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் முன்வந்து ஆஜராக கூடாது என்பதை இறுக்கமாக தெரிவிக்கும் வகையிலும் யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் நாளை 20 ம் திகதி புதன்கிழமை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவியின் படுகொலை குறித்து எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இப்போராட்டங்கள் காலத்தின் தேவையாகும். இருப்பினும் யாருக்கெதிராக நாங்கள் போராடுகின்றோம் என்பதில் போராட்ட ஏற்பாட்டாளர்களிடையே தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை.
.
மிக நீண்ட நாட்களின் பின்னர் இவ்வாறானதொரு போராட்டம் என்பதால் நான் முந்தி நீ முந்தி என ஆளாளுக்கு விரும்பிய வண்ணம் ஒவ்வொரு அமைப்பாலும் போராட்ட அழைப்புக்கள் விடுக்கப்படுவதையும் போராட்டம் நடைபெறுவதையும் காணமுடிகின்றது.
.
20 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கும் ஊர்வலத்திற்கும் வௌ;வேறு இடங்களில் ஒன்று கூடுமாறு ஒவ்வொரு ஏற்பாட்டாளரும் அழைப்பு விடுத்துள்ளனர். தவிர, வடமாகாணக் கல்வி அமைச்சர் பாடசாலைகளின் முன்னால் 20 ஆம் திகதி புதன்கிழமை காலை 11 மணி தொடக்கம் 12 மணி வரை கல்வி நடவடிக்கைகளை நிறுத்திப் போராடுமாறு கேட்டுள்ளார். எனவே யாருடைய சொல்லைக் கேட்பது என்ற சங்கடம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது

Related Posts