தேர்தலில் போட்டியிடுவது குறித்து அனந்தி இதுவரை விண்ணப்பிக்கவில்லை

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் -...

கொடிகாமம் விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட யுவதி கைது!

கொடிகாமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் யுவதி ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அனுமதி பெறப்படாமல் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் அங்கு சென்ற பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்ட யுவதியைக் கைதுசெய்தனர். வவுனியாவைச்...
Ad Widget

யாழ், வன்னியில் முன்னாள் புலிகள் வித்தி தலைமையில் களத்தில்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியிலும், வன்னித் தேர்தல் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட புலிகள் இயக்க போராளிகள் தீர்மானித்து உள்ளனர். ஜனநாயக போராளிகள் கட்சி என்கின்ற பெயரில் அமைப்பு ரீதியாக இணைந்து உள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய கூட்டத்தில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் போராளிகள் ஒருமனதாக விடுத்த...

காணாமற்போன குடும்பஸ்தர் மற்றும் அவரது 3 வயது மகன் பற்றி தகவல் கோருகிறது பொலிஸ்!

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காணாமற்போன உடுவில், மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தரான பிறேம்குமார் நிந்துஜன் (வயது 30) மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் (வயது 03) ஆகியோரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. இவர்கள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியால் ஒரு வருடத்துக்கு...

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: மற்றொரு சந்தேகநபர் கைதாகி விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குலுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியவிளான், இளவாலையை சொந்த முகவரியாகவும், ஏழாலை வடக்கு, ஏழாலையை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காணொளி ஆதரங்களுடன் குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர் என...

போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை

போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் 10ஆம், 11ஆம் மற்றும் 12ஆம் ஆகிய திகதிகளில் சகல மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு காலப்பகுதியை முன்னிட்டே இந்நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால்...

மஹிந்தவுக்கு வாய்ப்பளித்தால் மைத்திரியின் நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லை – சுரேஷ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், அஅவர் பேசுகின்ற நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லாது போய்விடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். அங்கு...

முன்னாள் போராளிக்கு பிணை

அளவெட்டி தெற்கு பகுதியில் புனர்வாழ்வு பெறாமல் தங்கியிருந்த போது திங்கட்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை 75,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (07) அனுமதியளித்தார். அத்துடன், மேற்படி சந்தேகநபர் புனர்வாழ்வு பெற்றாரா, இல்லையா என்பது தொடர்பில் விசாரணை செய்து அடுத்த வழக்கு விசாரணையான ஓகஸ்ட்...

ஓகஸ்ட் 5,6ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்கலாம் என்று மேலதிக தேர்தகள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

வடமாகாண வருமான வரித் திணைக்களம் திறந்துவைப்பு!

வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இன்று திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இலக்கம் 187, ஆடியபாதம் வீதியில் இன்று புதன்காலை 9 மணியளவில் திறந்துவைக்கப்பட்டதுடன் அலுவலகப் பணிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பிரதம செயலாளர் பத்திநாதன்...

கிளிநொச்சி இளம்பெண் வன்புணர்வு வழக்கு: தலைமறைவாகியுள்ள சிப்பாய்க்கு பிடியாணை! இன்ரர்போல் உதவியை பெறவும் உத்தரவு!!

கடந்த 2010ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார் எனக் கூறப்படும் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 4 இராணுவ வீரர்களில் தலைமறைவாகியுள்ள இராணுவ வீரர் ஒருவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் நான்காவது எதிரியாகிய இராணுவ வீரர் தலைமறைவாகி வெளிநாட்டுக்கு ஓடியிருந்தால், சர்வதேச பொலிஸார் மூலமாக அவரைக் கைதுசெய்வதற்கு...

மாணவர் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர வேண்டும் -அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள்

இலங்கையில் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வதில் அரச துறைக்கும் தனியார் துறைக்கும் அடுத்தபடியாக, மூன்றாவது துறையாகக் கூட்டுறவுத்துறை உள்ளது. 'ஒருவர் அனைவருக்காகவும் அனைவர் ஒருவருக்காகவும்' என்ற உயரிய கோட்பாடோடு இயங்கும் கூட்டுறவுத்துறை சமூகத்தில் சகல மட்டங்களிலும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அந்த வகையில், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் முதற்படிக்கட்டாக, மாணவர் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றைப் பலப்படுத்துவதற்குப் பாடசாலைகள் முன்வர...

இலங்கை கொலையை பெங்களூரில் நடந்ததாக பேஸ்புக்கில் வீடியோ ஷேர் செய்த தொழிலதிபர் கைது!

பெங்களூரு நகர ஷாப்பிங் மாலில் நடைபெற்றதாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோவால், தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மைசூர் நகரின் கே.ஆர்.மொகல்லா பகுதியை சேர்ந்தவர் 32 வயதான தொழிலதிபர் தீபக் குல்கர்ணி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி தனது பேஸ்புக்கில் கொலை தொடர்பான ஒரு வீடியோவை பதிவு செய்து, இந்த படு பயங்கர கொலை பெங்களூரின்...

காணாமல்போனோர் குறித்து தேர்தலின் பின் அவதானிப்போம் – த.தே.கூ

அரசியல் கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேற்படி கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோரின் பெற்றோர்களுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில், வவுனியாவில் திங்கட்கிழமை (06) சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது,...

கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்க ஊடுருவல் – பா.அரியநேத்திரன்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பல்வேறுபட்டவர்கள் ஊடுருவி வருவதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்காக...

வடக்கில் போட்டியிடுவதற்கு முக்கூட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் நபர்களும் இணைந்து முக்கூட்டை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இந்த புதிய கூட்டு போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு...

க.பொ.த பரீட்சை விண்ணப்பங்களில் மாற்றம்

விண்ணப்பதாரர்களின் வசதி கருதி கல்வி பொதுத் தராதர உயர்தர விண்ணப்பங்களில் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதற்காக 3 விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். அதற்கமைய விண்ணப்பங்களில் தேசிய அடையாள அட்டை இலக்கம், எப்பிரிவில் தோற்றவுள்ளனர் மற்றும் பரீட்சை இலக்கம் என்பன உள்ளடக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்....

யாழ் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள்!

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க இம் முறை யாழ் மாவட்டத்தில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் தகுதி பெற்றுள்ளனர் என யாழ் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 22 ஆயிரத்து 57 பேரும், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 47...

மீசாலையில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

சாவகச்சேரி - மீசாலை மேற்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கையாலபிள்ளை உதயநாதன் எனத் தெரியவந்துள்ளது. நேற்றயதினம் காலை 07.30 அளவில் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்று, பின் வீடு திரும்பியவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காலை...

குடும்பத்தாரின் காலை உணவிற்காக 9.4 மில்லியன் செலவிடப்பட்டதா? மஹிந்த பதில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தாரின் காலை ஆகாரத்திற்காக 9.4 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக வௌியான தகவல் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட ஒன்று என, அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவினர் வௌியிட்டுள்ள அறிக்கையில், ராஜபக்ஷ குடும்பத்தினர் ஹில்டன் ஹோட்டலில் இருந்து ஒரு வேளை உணவை பெற்றுக் கொள்ள 9.4...
Loading posts...

All posts loaded

No more posts