தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார் ஐ.நா. விசேட அறிக்கையாளர்

சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், இன்று (புதன்கிழமை) இச் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான...

திவிநெகுமவை சமுர்த்தியாக மாற்ற அனுமதி

திவிநெகுமவுக்கு பதிலாக சமூர்த்தி எனும் பதத்தை உபயோகிப்பது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. திவிநெகும எனும் பதத்திற்கு பதிலாக சமூர்த்தி எனும் பதத்தை உபயோகிக்கும் வகையில் 2013ம் ஆண்டின் 01ம் இலக்க திவிநெகும சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அதனை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமான யோசனைக்கே இவ்வாறு அனுமதி...
Ad Widget

புதிய ஐநா செயலாளரிடம் சம்பந்தன் கோரிக்கை

இலங்கையில் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐநா சபைக்கு புதிய செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அண்டோனியோ குட்டெரெஸ்சுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்ட விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் இலங்கைக்குள்...

யாழ் வருகின்றார் மஹிந்த ராஜபக்ஷ!

சிறுபான்மை மக்களின் ஆதரவை பெறும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே களத்தில் இறங்கவுள்ளதாகவும், விரைவில் யாழ்ப்பாணத்திற்குச் சென்று பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமது புதிய கட்சிக்கு சிறுபான்மை இனத்தவர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ள பஷில், யாழில் புதிய அமைப்பாளர்...

ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவு நாள் ; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. இதற்கமைய இன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – ஏ9 வீதியிலுள்ள மாநகர சபைக்கு முன்னால் உள்ள விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்...

டில்ருக்ஷியின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டார் மைத்திரி!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவின் பதவி விலகலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விரைவில் புதிதாக ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அண்மையில் தான் இலங்கை மன்றக்...

வடமாகாண சபை பேரவைச்செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

வடமாகாண சபையின் பேரவைச்செயலகத்தின்   உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. வடமாகாண சபையை பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் வடமாகாண சபையின் பேரவைச்செயலகத்தின்  உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) வடமாகாண சபை பேரவைச்...

கலப்பினக் கால்நடைகள்மீது காட்டுகின்ற அக்கறையை நாட்டு இனங்களின் மீதும் காட்டுங்கள் : பொ.ஐங்கரநேசன்

நாங்கள் எவ்வாறு இந்த மண்ணின் சொந்தக்காரர்களோ, அதேபோன்று இந்த மண்ணுக்கே உரித்தான கால்நடைகளும் உள்ளன. கலப்பு இனங்களின் வருகையோடு நாட்டுப் பசுக்கள், நாட்டு ஆடுகள், நாட்டு நாய்கள் மீதான அக்கறை குறைந்துபோக, அவை இன்று கவனிப்பார் இல்லாமல் தெருவோர விலங்குகளாக அலைந்து கொண்டிருக்கின்றன. கலப்பினக் கால்நடைகள்மீது காட்டுகின்ற அக்கறையை எமது மண்ணின் இயற்கைச் சொத்தான இவற்றின்...

அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் அறிவுறுத்தல்

அதிகவேக நெடுஞ்சாலையில் கடும் மழை பெய்வதன் காரணமாக, சாரதிகள் தங்கள் வாகனத்தின் முன்புற விளக்குகளை ஒளிரவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது

யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்குப் பிணை கிடையாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், செவ்வாய்க்கிழமை (18) கூறினார். வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவன் இரத்திரனசிங்கம் செந்தூரனைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிணை மனு, செவ்வாய்க்கிழமை (18) மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது....

யாழ்பாண தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு ஜனாதிபதி அனுமதி

யாழ் தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள தீவுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்தினை சீரான முறையில் நடாத்தும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படையினரின் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலிற்கமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் யாழ்ப்பாண தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களை...

யாழ் பல்கலை ஊழியர்கள் போராட்டம்

இன்றைய தினம் சகல ஊழியர்களையும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபடுமாறு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கோரியுள்ளது. அந்த அறிக்கையில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போரட்டம் எம்மால் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பின்வரும் திகதிகளில் பதிவாளரூடாக துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட கடிதங்கள் சம்பந்தமாக குறிப்பிடத்தக்க அளவு உரிய தீர்வுகள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் 19.10.2016 இன்று அடையாள...

‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் முதலமைச்சரின் உரை(காணொளி இணைப்பு)

பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ்(Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தனதுரையில் வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கான முக்கிய தேவைகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் வடக்கில் தற்போதுவரை இராணுவத்தினரின் கைவசம் ஏராளமான காணிகள்...

கடற்படையினர் மக்கள் இடையில் மோதல்!! பொது மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு!!

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்றிரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடடன், பொது மக்களை நோக்கி கடற்படையினர் துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அரிப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டுச்சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் அரிப்பு...

அரச இரகசியம் தமிழீழ இணையத்தளத்தில்

இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட மூலத்தின் பிரதி லண்டனிலிருந்து செயற்படும் தமிழீழ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 58 பக்கங்களைக் கொண்ட இந்த சட்ட மூலம் நேற்று (18) குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய சிங்கள நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்ட மூலம் மக்கள் தெரிந்து கொள்வதற்கு இதுவரையில் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தமிழ்...

புலம்பெயர்வை தடுக்க புதிய செயலணி: பிரதமர் ரணில்

ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்வதை தடுக்கும் நோக்கில், புதிய செயலணியொன்றை நிறுவவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, நீதியமைச்சு மற்றும் குடியகல்வு குடிவரவு திணைக்களத்துடன், ஐரோப்பிய ஆணைக்குழுவையும் தொடர்புபடுத்தி குறித்த செயலணியை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை மீளப்...

பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்க முடியும்: பஷில் ராஜபக்ஷ

கடந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான மரண சான்றிதழை ஏன் மஹிந்த அரசு வழங்கவில்லையென்பது சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்டு வந்திருந்த கேள்வியாகும். இந்நிலையில்,...

சாவகச்சேரியில் சடலங்களை விடுவிக்கவும் இலஞ்சம்! தென்மராட்சி பொது அமைப்புக்கள் வைத்திய அதிகாரிக்கு எதிராக புகார்!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சடலங்களை ஒப்படைக்க இலஞ்சம் கோருவதாக மத்திய சுகாதார அமைச்சரிற்கு புகார் செய்யப்பட்டுள்ளது.தென்மராட்சியை சேர்ந்த பொது அமைப்புக்கள் இணைந்து இலங்கை சுகாதார அமைச்சரிற்கு கையளித்துள்ள புகாரின் பிரதிகள் இலங்கை ஜனாதிபதி முதல் பிரதமர்,வடமாகாண முதலமைச்சர் ஈறாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 77 பொது அமைப்புக்களது பிரதிநிதிகளது ஒப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள...

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு அழைப்பாணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அழைப்பாணை பிறப்பித்துள்ளார். நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவன்ட் கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி நீதிமன்றில் விடுத்த கோரிக்கை ஒன்று தொடர்பிலேயே, தில்ருக்ஷியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு...

எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபரின் குடும்பத்துக்கு நட்டஈடு

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரொருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, முன்னாள் இராணுவ லெப்டினன், சுட்டுக்கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபரின் குடும்பத்தினருக்கு, இரண்டு மில்லியன் ரூபாயை, நட்டஈடாக வழங்கினார். பருத்தித்துறை இராணுவ முகாமில் 1998ஆம் ஆண்டு, குறித்த சந்தேகநபர், கைவிலங்கிட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
Loading posts...

All posts loaded

No more posts