அரச இரகசியம் தமிழீழ இணையத்தளத்தில்

இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட மூலத்தின் பிரதி லண்டனிலிருந்து செயற்படும் தமிழீழ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

capture

58 பக்கங்களைக் கொண்ட இந்த சட்ட மூலம் நேற்று (18) குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய சிங்கள நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்ட மூலம் மக்கள் தெரிந்து கொள்வதற்கு இதுவரையில் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரபல நபர் ஒருவருக்கு இந்த சட்ட மூலம் கிடைக்கப் பெற்றுள்ளதாக லண்டன் செய்தி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மிகமிக இரகசியத் தன்மையுடையது எனக் கொள்ளத்தக்க அம்சங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட மூலத்தின் கீழ், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரியவந்தால், அவருக்கு 20 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையும், சொத்துக்கள் அரசுடமையாக்கல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts