அநுராதபுரத்தில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல்!!

அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீதான தாக்குதல் மற்றும் இளைஞர் மீதான வாள் வெட்டுச் சம்பவத்துக்கு நீதி கோரி, அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. தாக்குதல் குறித்து நீதி பெற்றுத் தரப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அநுராதபுரம்...

சாவகச்சேரி வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வாயிற் காவற் கடமையில் ஈடுபட்டிந்த வேலைப் பரிசோதகர் மற்றும் கவலாளி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். காவற் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மூவர் கொண்ட குழுவினர் தலைக் கவசங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
Ad Widget

வாள்வெட்டு சந்தேகநபர்களைத் தேடி யாழில் வேட்டை

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு, குழுமோதல்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நேற்று வியாழக்கிழமை (20) முதல் செயற்படத் தொடங்கியதுடன், முதல் நாள் ரோந்து நடவடிக்கையில் கொக்குவில் சந்திப்பகுதியில் வைத்து, வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளது. இந்தக் குழு தொடர்ந்து வரும் நாட்களில்,...

ஜனாதிபதி செலவு அதிகரிப்பு!! கல்விக்கான ஒதுக்கீடு குறைவு

2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய 2017ம் ஆண்டு தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படும் அரசாங்க செலவு 1819.5 பில்லியன் ரூபா எனத் தெரியவந்துள்ளது. 2016ம் ஆண்டில் 1941.4 பில்லியன் ரூபாவாக இந்தத் தொகை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2016ம் ஆண்டு 2.3 பில்லியன் ரூபாவாக...

நல்லூர் பிரதேச சபையின் முன்பாக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நல்லூர் பிரதேச சபையின் உபஅலுவலகத்தின் பொறுப்பதிகாரி து.சசிக்குமார் மீது, அலுவலகத்தில் வைத்து பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நல்லூர் பிரதேச சபை தலைமை அலுவலகம் முன்பாக பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை (20) ஆர்ப்பாட்டம் செய்தனர். காணிப் பிணக்கு தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி உபஅலுவலகத்தில் வைத்து இரு தரப்பினரை பொறுப்பதிகாரி சமரசம்...

வடக்கு சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பு

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நீதவானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான பிரச்சாரம் இணையத்தளம் ஒன்றில் வௌியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் உட்பட வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாக...

மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக மீண்டும் தில்ருக்ஷி நியமனம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவிலிருந்து பதவி விலகுவதாக தில்ருக்ஷி அனுப்பிவைத்த கடிதம், நேற்று ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இன்று அவர் மீண்டும் மேலதிக சொலிஸிட்டர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக, கடந்த 2015ஆம் ஆண்டு...

மதுபோதையில் பஸ் செலுத்தியவர் கைது

மதுபோதையில் பயணிகள் பஸ் செலுத்திச் சென்ற பஸ் சாரதியை புதன்கிழமை (19) மாலை அச்சுவேலி பகுதியில் கைது செய்துள்ளதாக அச்வேலி பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வீதிச் சோதனையில் நின்றிருந்த பொலிஸார், இவரிடம் சோதனை நடத்தியபோது, மதுபோதையில் இருந்தமை தெரியவந்தது. கைதான சாரதிக்கு...

விபத்தில் குடும்பஸ்தர் பலி

கைதடிச் சந்திப் பகுதியில் புதன்கிழமை (19) இரவு இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையாபன சகாதேவன் ஜோகன் (வயது 36) என்பவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் சென்ற பஸ்ஸுடன், சாவகச்சேரியிலிருந்து கைதடி...

தெற்கு அதிவேக பாதையின் வேகம் 60 ஆக மட்டுப்பாடு

நாட்டில் தற்பொழுது பெய்து வரும் அதிக மழை மற்றும் பனி மூட்டம் என்பன காரணமாக தெற்கு அதிவேக பாதையில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை 60 ஆக குறைத்துக் கொள்ளுமாறு பாதை அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அப்பாதையில் இடம்பெற்று வரும் விபத்துக்களைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள்,...

தமிழ் ஊடகப்பரப்புக்கு எதிரான படுகொலை கலாச்சாரம் 41 ஊடகவியலாளர் மற்றும் ஊடகப்பணியாளர்களை கொல்லவோஅல்லதுகாணாமல் போகவோ செய்துள்ளது

ஊடக அறிக்கை 19.10.2016 இன்றுடன் எங்கள் சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்து செல்கின்றது. இலங்கையினில் தமிழர் தாயகத்தினில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ,அதே போன்று படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை. நிமலராஜன்...

சிறுபான்மையினருக்கு இலங்கையில் உரிய இடமில்லை: ஐ.நா.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு உரிய இடமில்லை என்பது தெளிவாக தெரிவதாக, ஐ.நா.வின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா. அறிக்கையாளர், நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்ததாக, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து...

கடத்தப்பட்ட 5 மாணவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை;கடற்படை சாட்சியம்

கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என ஸ்ரீலங்கா கடற்படைப் புலனாய்வு பிரிவின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில்...

இரா.சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசியச் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இரகசியச் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடபெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன. இச்சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இரா. சம்பந்தனைச் சந்திப்பதும், அவரது கருத்தை செவிமடுப்பதும் எப்போதும் தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அதுல் கெசாப்...

முசலியில் மீண்டும் பதட்டம்!! : கடற்படையினர் இருமீனவர்களை கடத்தி சென்றுவிட்டதாக மக்கள் விசனம்!

முசலி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட அரிப்புக் கிராமத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கிராமத்துக்குள் புகுந்த கடற்படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர். இதனால் கடற்படையினருக்கும் மக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டது. இன்னிலையில் கடற்படைச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக கடற்படையினர் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நேற்று காலை கடலுக்குப்...

வலிகிழக்கு பிரதேச சபை முன் பொதுமக்கள் ஆர்பாட்டம்

புத்தூர், ஏரந்தணை பகுதியில், வயல்காணிகளில் மண் நிரவி கட்டடம் அமைக்கும் தனியார் ஒருவரின் வேலைத்திட்டத்துக்கு, புத்தூர் பிரதேச சபையின் செயலாளர் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள், நேற்று புதன்கிழமை (19) காலை பிரதேச சபையின் அலுவலகத்தினை திறக்கவிடாது முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புத்தூர் சந்தியில் இருந்து பேரணியாக நடந்து வந்த அப்பகுதி மக்கள்,...

மின்வெட்டு இனி இல்லை

இனிவரும் நாட்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சகதி எரிசக்தி அமைச்சு, அறிவித்துள்ளது. கடந்த 17ஆம் திகதிமுதல், நாடாளாவிய ரீதியில் காலை 8 மணி முதல் ஒரு மணித்தியாலம் மற்றும் மாலை 6 மணிக்கு பிறகு 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இனிவரும் நாட்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி...

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

யாழ் தட்டாதெருச் சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் சாரதிகள் இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழிலிருந்து கே .கே .எஸ் வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே குறித்த...

07 பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு; மேலும் ஒருவரை கைது செய்ய பிடியாணை

2011ம் ஆண்டு யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தால், திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், எட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஏழு பேரின் விளக்கமறியலை நீடிக்க யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவர் மன்றில் முன்னிலையாக நிலையில் குறித்த நபருக்கு எதிராக மேல்...

யாழ்ப்பாணத்தின் பெருமைக்குரிய ‘வணிகக்கல்வி ஆசான்’ பசில் ஜெனதாஸின் இறுதி நிமிடங்கள்! (Video)

யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக கல்வி ஆசிரியரான பெனடிக்ற் பசில் ஜெனதாஸ் அவர்களின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதறல்களுக்கு நடுவே கடந்த (17.10.2016) திங்கட்கிழமை செம்மணியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுவாமியார் வீதி, கொழும்புத்துறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வுகளும், நினைவுரைகளும், சமயச் சடங்குகளும் இடம்பெற்றன. இறுதி நிகழ்வில் ஏராளமான ஆசிரியர்கள்,...
Loading posts...

All posts loaded

No more posts