சாவகச்சேரி வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வாயிற் காவற் கடமையில் ஈடுபட்டிந்த வேலைப் பரிசோதகர் மற்றும் கவலாளி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

காவற் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மூவர் கொண்ட குழுவினர் தலைக் கவசங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தாக்குதல் மேற்கொண்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related Posts