முசலியில் மீண்டும் பதட்டம்!! : கடற்படையினர் இருமீனவர்களை கடத்தி சென்றுவிட்டதாக மக்கள் விசனம்!

முசலி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட அரிப்புக் கிராமத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கிராமத்துக்குள் புகுந்த கடற்படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

இதனால் கடற்படையினருக்கும் மக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டது. இன்னிலையில் கடற்படைச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக கடற்படையினர் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நேற்று காலை கடலுக்குப் போன அக்கிராமத்து மீனவர்கள் மீது கடற்படையினர் கெடுபிடிகளை மேற்கொண்டு இரண்டு மீனவர்களை கடற்படை முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

சகோதரர்களான சில்வஸ்ரர் மற்றும் இம்மான் ஆகிய இரண்டு மீனவர்களுமே கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடலுக்குச் செல்வதற்கு படகுக்கான வரி கட்டிய சிட்டையைக் காட்டவில்லையென்றே தாம் அவர்களைக் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்கள் இருவரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொண்டு வருவதாக அப்பகுதி பங்குத் தந்தை டெனிகலிஸ்சடர் தெரிவித்துள்ளார்.

Related Posts